பனிப்பொழிவு காரணமாக Zug கன்டோனில் அடுத்தடுத்து ஏற்பட்ட விபத்துகள்.!! சுவிற்சர்லாந்தில் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினம் பனிப்பொழிவு காணப்பட்டது. இதன் காரணமாக ஒரு சில இடங்களில் வாகன விபத்துக்கள் சில பதிவாகியுள்ளது.
குறிப்பாக Zug மாகாணத்தில் பனி மூடிய சாலைகளில் இரண்டு விபத்துகள் நிகழ்ந்தன. இதன்போது நான்கு பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புதன்கிழமை காலை (ஜனவரி 18, 2023) Zug மாகாணத்தில் பனிப்பொழிவு காரணமாக ஒரு சில நிமிடங்களிலையே இரண்டு விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது. முதல் விபத்து காலை 10:45 மணிக்கு சற்று முன்னர் Zug நகரில் உள்ள Ägeristrasse இல் இடம்பெற்றுள்ளது. Ägeri திசையில் தனது வாகனத்தை ஓட்டிச் சென்ற 41 வயதுடைய ஓட்டுநர் வழுக்கி, எதிரே வந்த பாதையில் ஏறி, எதிரே வந்த கார் மீது நேருக்கு நேர் மோதியுள்ளார்.
இரண்டாவது காரின் சாரதியான 66 வயதுடைய பெண் காயங்களுடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்நிலையில், விபத்தை ஏற்படுத்திய பெண்ணுக்கு காயம் ஏற்படவில்லை. இரண்டு வாகனங்களும் பல்லாயிரக்கணக்கான பிராங்குகள் இழப்பை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சில நிமிடங்களில் மீண்டும் ஒரு விபத்து
சில நிமிடங்களுக்குப் பிறகு, Baar நகராட்சியில் உள்ள Geissbüel சாலை சுரங்கப்பாதைக்கு மேலே உள்ள Kreuzung ல் இரண்டாவது போக்குவரத்து விபத்து ஏற்பட்டது. 37 வயதுடைய ஓட்டுநர் ஒருவர் Baar லிருந்து Margel சந்திப்பின் திசையில் Aegeristrasse ல் சென்று கொண்டிருந்தபோது அவரது வாகனம் பனி மூடிய சாலையில் சறுக்கியது.
எதிரே நிறுத்தப்பட்டிருந்த கார் மீது மோதாமல் இருக்க, அவர் இடதுபுறமாகச் சென்று பாதையில் ஓட்டியயபோதும் எதிரே வந்த வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

சிறிது நேரம் கழித்து ஏற்கனவே விபத்துக்குள்ளான அதே கார் மீது மற்றுமொரு கார் பனியில் சறுக்கு மோதியுள்ளது. குறித்த விபத்தில் ஓட்டுனர்கள் முறையே 46 வயது, 37 வயது மற்றும் 30 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. இதில் 30 வயதுடையவர் ஓட்டிச்சென்ற காரில் பயணித்த 37 வயதான ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவ மனைக்கு அழைத்துசெல்லப்பட்டார்கள். மேலும் இவ்விபத்து சம்பவங்களால் 10,000 பிராங்குகளுக்கு மேல் சொத்து சேதம் ஏற்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் சுவிற்சர்லாந்தின் உள்ளுர் செய்திகள் முதல் அத்தனை விடயங்களையும் அறிந்து கொள்ள SwissTamil24.Com எமது இணையத்தளத்தினை தினமும் பார்வையிடுங்கள்.