துருக்கி, சிரியா நில நடுக்கம் – சுவிட்சர்லாந்து உதவி வழங்க முடிவு.! நில நடுக்கத்தினால் பாரிய அழிவுகளை எதிர்நோக்கியுள்ள துருக்கி மற்றும் சிரியா ஆகிய நாடுகளுக்கு உதவிகளை வழங்குவதாக சுவிட்சர்லர்நது அறிவித்துள்ளது.
இந்த பாரிய பேரனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்காக சுவிட்சர்லாந்து ஜனாதிபதி எலொய்ன் பீரெஸ்ட் ஆழ்ந்த இரங்கல்களை வெளியிட்டுள்ளார். இந்த நில அதிர்வுகளினால் சுமார் 3500 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் கயாமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக ஜனாதிபதி பீரெஸ்ட் தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்து அவசர நிவாரணங்களை வழங்கத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மிக மோசமான நில நடுக்கத்தில் பாதிக்கப்பட்ட துருக்கி மற்றும் சிரிய மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிகளை வழங்கத் தயார் என அறிவித்துள்ளார்.
மேலும் சுவிற்சர்லாந்தின் உள்ளுர் செய்திகள் முதல் அத்தனை விடயங்களையும் அறிந்து கொள்ள SwissTamil24.Com எமது இணையத்தளத்தினை தினமும் பார்வையிடுங்கள்.
(source:-Tamilinfo)