முக்கிய செய்திகள்

திடீரென்று கேட்ட துப்பாக்கி சத்தம்… : சடலமாக மீட்கப்பட்ட சுவிஸ் தம்பதி

துப்பாக்கி சத்தம்

திடீரென்று கேட்ட துப்பாக்கி சத்தம்… : சடலமாக மீட்கப்பட்ட சுவிஸ் தம்பதி – சுவிட்சர்லாந்தின் வாட் மண்டலத்தில் குடியிருப்பு ஒன்றில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இறந்த நிலையில் இருவரின் சடலங்களை பொலிசார் மீட்டுள்ளனர்.

இறந்தவர்கள் இருவரும் கணவன் மனைவி என கூறப்பட்ட நிலையில், மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு, அவர் தற்கொலை செய்திருக்கலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வாட் மண்டலத்தின் Bussigny பகுதியிலேயே குறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. திடீரென்று துப்பாக்கி சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினரில், சிலர் அளித்த தகவலின் பேரில் சம்பவப்பகுதிக்கு வந்த பொலிசார், இருவரது சடலங்களையும் மீட்டுள்ளனர்.

கண்ணுக்கு தெரியாத பூட்டு.!! சுவிட்சர்லாந்தில் ஒரு ஆச்சரிய கண்டுபிடிப்பு.

தற்கொலை செய்து கொண்டதாக கருதப்படும் அந்த நபருக்கு 52 வயது இருக்கலாம் எனவும், அவர் காவல்துறையில் பணியாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் பொலிசார் அதை இதுவரை உறுதி செய்யவில்லை. மேலும், கொல்லப்பட்டதாக கூறப்படும் பெண்மணி தொடர்பில் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

துப்பாக்கி சத்தம்

இந்த வழக்கு தொடர்பில் பொலிச்சார் விசாரணை முன்னெடுத்துள்ளனர்.

Related posts