Image default
Swiss headline NewsAargauSwiss Local News

ஜேர்மனியிலிருந்து சுவிட்சர்லாந்துக்குள் நுழைந்த கார் – போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி

ஜேர்மனியிலிருந்து சுவிட்சர்லாந்துக்குள் நுழைந்த கார் – போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி- சென்ற வாரம், ஜேர்மனியிலிருந்து சுவிட்சர்லாந்துக்குள் நுழைந்த கார் ஒன்றை எல்லையில் சுங்க அதிகாரிகள் சோதனையிட்டுள்ளார்கள்.

பொலிசாரை அதிர்ச்சியடையவைத்த காட்சி
அப்போது, சுங்க அதிகாரிகளின் மோப்ப நாய் காரில் உணவுப்பொருட்கள் வைத்திருந்த பை ஒன்றை சந்தேகத்துக்குரியது என காட்டிக்கொடுத்துள்ளது.

அந்தப் பையை பொலிசார் சோதிக்க, கொஞ்சம் ஆரஞ்சுப் பழங்கள், தண்ணீர் போத்தல்கள், முட்டைகள், உருளைக்கிழங்குகள் முதலான உணவுப்பொருட்கள் அந்தப் பையில் இருந்துள்ளன.

Aargau, ஜேர்மனி, சுவிட்சர்லாந்துக்குள் நுழைந்த கார்,அதிர்ச்சி,SwissTasmilNews, TamilSwiss
ஜேர்மனியிலிருந்து சுவிட்சர்லாந்துக்குள் நுழைந்த கார் – போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி

அவற்றிற்குக் கீழே, ஒரு பார்சல் இருந்துள்ளது. அதை எடுத்து பொலிசார் சோதனை செய்தபோது, அதில் இரண்டு கிலோ அளவுக்கு கொக்கைன் என்னும் போதைப்பொருள் இருந்ததைக் கண்டு பொலிசார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

காரில் இருந்த போதைப்பொருள்

அதிர்ச்சிக்குக் காரணம் போதைப்பொருள் மட்டுமல்ல. பொலிசாரின் அதிர்ச்சிக்குக் காரணம், அவர்கள் இவ்வளவு போதைப்பொருளைக் கடத்தியது மட்டுமல்ல, அதை கொஞ்சம் கூட பயமில்லாமல், சர்வசாதாரணமாக ஷாப்பிங் சென்று வருவதுபோல, உணவுப்பொருட்களுடன் வைத்திருந்ததுதான்.

இந்த சம்பவம் Aargau மாகாணத்தில் நடைபெற்ற நிலையில், பொலிசார் அந்தக் காரில் இருந்த இரண்டு பேரையும் கைது செய்துள்ளார்கள்.

Advertisements

Related posts

பனிக்காலம் எச்சரிக்கை.! Luzern இல் போலீசார் நடத்திய திடீர் சோதனை.!!

admin

Uster ZH இல் வீதியில் நின்ற சேவல் – உரிமையாளரை தேடும் போலீசார்.!

admin

சுவிஸ் லுசேர்ன் A2 நெடுஞ்சாலையில் கோர விபத்து : 24 கார்கள் சேதம் (அதிர்ச்சி வீடியோ)

admin