முக்கிய செய்திகள்

ஜெனீவா ஏரியில் மிதந்த ஆணின் சடலம்

geneva

ஜெனீவா ஏரியில் மிதந்த ஆணின் சடலம் ஒன்றை வாட் மண்டல பொலிசார் வியாழக்கிழமை பகல் மீட்டுள்ளனர்.

குறித்த சடலமானது ரோல் துறைமுகத்திற்கு அருகில் மிதந்துள்ளது. இதனைக் காண நேர்ந்த வழிபோக்கர் ஒருவர் சுமார் 10 மணியளவில் உரிய அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளார்.

இந்த தகவலை பொலிசாரே ஊடகங்களுக்கு தெரியப்படுத்தியுள்ளனர். முதற்கட்ட விசாரணையில், அந்த நபருக்கு 73 வயதிருக்கும் எனவும், தமது படகை சவாரிக்கு தயார் செய்யும் நிலையில், அவர் தண்ணீரில் தவறி விழுந்திருக்கலாம் எனவும் தெரிய வந்துள்ளது.

geneva

இந்த விவகாரம் தொடர்பில் தற்போது விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அந்த நபர் குறித்த தகவல்கள் திரட்டப்பட்டு வருகிறது.

குடும்பத்தினருக்கு இதன் பின்னர் தகவல் தெரிவிக்கப்படும் என்றே கூறப்படுகிறது. அந்த நபரின் மரணத்தில் மூன்றாம் தரப்பினரின் பங்களிப்பு தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்படுமா என்பது பின்னர் முடிவு செய்யப்படும் என்றே கூறப்படுகிறது.

Thulasi-Thirumana-Sevai

Related posts