சொலுத்தூர்ன் மாநிலம் Egerkingen பகுதியில் இரு வாகனங்கள் மோதி விபத்து.! புதன்கிழமை பிற்பகல் Egerkingen இல் உள்ள எக்ஸ்பிரஸ் சாலையில் இரண்டு வாகனங்கள் சம்பந்தப்பட்ட போக்குவரத்து விபத்து ஏற்பட்டுள்ளது. இவ்விபத்து சம்பவத்தின் போது யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

புதன்கிழமை, ஜனவரி 4, 2023 அன்று, மதியம் 1:10 மணியளவில், ஒரு வாகன ஓட்டி, Egerkingen ல் உள்ள A2 மோட்டார்வேயில் இருந்து Bern திசையில் புறப்பட்டு, இடதுபுறம் ExpressStrasse ல் திரும்பும் போதே மற்றைய வாகனத்துடன் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவத்தினால் அப்பகுதியில் சற்று நேரம் போக்குவரத்து பாதிக்பட்டிருந்ததோடு விபத்துக்குள்ளான இரு வாகனங்களும் இழுத்து செல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் சுவிற்சர்லாந்தின் உள்ளுர் செய்திகள் முதல் அத்தனை விடயங்களையும் அறிந்து கொள்ள SwissTamil24.Com எமது இணையத்தளத்தினை தினமும் பார்வையிடுங்கள்.