Image default
Swiss Local NewsSolothurn

சொலத்தூர்ன் மாநிலம் Olten பகுதியில் நகைக்கடையை கொள்ளையடித்த நபர்கள் கைது.!

சில வாரங்களுக்கு முன்பு Olten இல் உள்ள Baslerstrasse இல் உள்ள ஒரு நகைக் கடையில் இரண்டு திருட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து குற்றவாளிகள் என்று கூறப்படும் நபர்கள் கைது செய்யப்பட்டு இன்றைய தினம் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

செப்டம்பர் 22, மற்றும் அக்டோபர் 11, 2022 இரவு ஓல்டனில் உள்ள Baslerstrasse ஒரு நகைக் கடை உடைக்கப்பட்டு நகைகள் மற்றும் கைக்கடிகாரங்கள் திருடப்பட்டன.

பின்னர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் தப்பியோடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் ஆர்காவ் கன்டோனல் போலீசாரால் சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டனர்.

சொலத்தூர்ன் மாநிலம்

இவர்கள் சுவிட்சர்லாந்தில் நிரந்தர குடியிருப்பு இல்லாத ரோமானியர்கள் எனத் தெரியவந்துள்ளது. குற்றத்தில் ஈடுபட்ட குறித்த நபர்கள் இருவரும் 20 வயது நிரம்பிய இளைஞர்கள் எனவும் தற்போது காவல் நிலையத்தில் கைது செய்து வைத்திருப்பதாகவும் போலீசார் தெரிவித்தார்கள்.

மேலும் சுவிற்சர்லாந்தின் உள்ளுர் செய்திகளையும் முக்கிய செய்திகளையும் தினமும் அறிந்துகொள்ள எமது இணையத்தளத்துடன் இணைந்திருங்கள். நன்றி

Advertisements

Related posts

சுவிற்சர்லாந்து சொலுத்தூர்ன் மக்களுக்கு போலீசார் அவசர எச்சரிக்கை ..!!

admin

சுவிட்சர்லாந்தில் பிடிபட்ட வேனுக்குள் இருந்த 23 புலம்பெயர்ந்தோர்… எந்த நாட்டவர்கள் தெரியுமா?

admin

சுவிஸ் Basel நகரில் பற்றி எரிந்த குடியிருப்பு வீடு – வீடியோ இணைப்பு

admin