சைபர் தாக்குதல் தொடர்பில் சுவிட்சர்லாந்து மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சைபர் குற்றவாளிகள் whatsapp கணக்குகளை இலக்கு வைத்து புதிய சைபர் தாக்குதல் முயற்சிகளை மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.
எனவே வாட்ஸ்அப் பயன்படுத்தும் போது குறிப்பாக இரவு நேரத்தில் whatsapp பயன்படுத்தும் போது மக்கள் போதிய அளவு அவதானத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
மத்திய அரசாங்கம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சைபர் பாதுகாப்பு குறித்த தேசிய நிலையம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
whatsapp பிளாக் செய்யப்படுதல், வித்தியாசமான ப்ரொபைல் படங்களை மாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு முறை பாடுகளை பயனர்கள் செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகத்துக்கிடமான தகவல்கள் வந்தால் அவற்றை கவனத்திற்கு கொள்ள வேண்டாம் எனவும் அதற்கு பதில் அளிக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.