முக்கிய செய்திகள்

சென்காலன் மாநிலத்தில் 100 பேருக்கு தண்டப்பணம் விதித்த போலீசார்

சென்காலன் மாநிலத்தில் தடைகளை மீறி, நேற்று நடைபெற்ற பார்டி நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட சுமார் 100 பேருக்கு செங்காலன் காவல்துறையின் குற்றப்பணம் அறவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வெளியிடங்களில் 15 பேருக்கு அதிகமாக மக்கள் கூடுவதும், விருந்துபசாரங்கள் செய்வதற்குமான தடையுத்தரவு தற்போது நடைமுறையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த தடை உத்தரவை மீறி செயற்பட்டவர்கள் மீதே இவ்வாறு தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்தில் கொரோனா வைரஸ் தொற்றின் புதிய மாறுபாடு அதிகரிப்பினால்இ பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிப்பதா ? என்பது குறித்து விவாதிக்க மத்திய மற்றும் மாநில அரசுகளின் அதிகாரிகள் நேற்று சந்திப்பு ஒன்றை நடாத்தியுள்ளனர்.

சென்காலன் மாநிலத்தில்

முதலில் திட்டமிட்டபடி, மீதமுள்ள சில கட்டுப்பாடுகள் மார்ச் 22 ந்திகதி அல்லது ஏப்ரல் 1 ம் திகதி வரை தொடர வேண்டுமா என்று மத்திய அரசும் மற்றும் மாநில அரசுகளும் இன்று பிற்பகல் விவாதிக்க திட்டமிட்டுள்ளன.

குறிப்பாக உணவகங்களை மீண்டும் திறப்பதற்கான சாத்தியக்கூறு குறித்து ஆராயப்படவுள்ளது. இது தொடர்பில் ஆராய தொழில்துறை மற்றும் சில அரசியல் குழுக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எதுவாயினும் இந்த விவாதங்களின் இறுதி முடிவு மார்ச் 19 அன்று எடுக்கப்படும். ஆனால் அதிகரித்து வரும் தொற்றுநோய்களைக் கருத்தில் கொண்டு, ஆரம்பகால மறு திறப்புகள் விரைவாக அமையச் சாத்தியங்கள் இருக்காது என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

Related posts