முக்கிய செய்திகள்

சென்காலன் மாநிலத்தின் கொரோனா நோயாளர்கள்- வெளியான விபரங்கள்

கொரோனா தடுப்பூசி

சென்காலன் மாநிலத்தின் கொரோனா நோயாளர்கள்- வெளியான விபரங்கள் சுவிட்சர்லாந்து முழுவதிலும் உள்ள தற்போதைய கொரோனா நிலைமை குறித்த தகவல்களை நாம் வழங்கி கொண்டிருக்கிறோம் .

அந்த வகையில் சென்காலன் மாநிலத்தின் இன்றைய கொரோனா நிலவரங்களை சென்காலன் மருத்துவமனை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரிவிக்கப்பட்டள்ளதாவது :-

கொரோனா தடுப்பூசி

சென்காலன் மாநிலத்தில் இன்று வியாழக்கிழமை தற்பாதையை நிலவரம்படி 73 புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதன் பொருள் நேற்று 63 ல் இருந்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை இன்று 100 ஆக உயர்ந்திருக்கிறது. எனினும் இறப்புகள் இல்லை என சொல்லப்படுகிறது.

ஆய்வுகளின் பின்னர் கோரோனா பாசிட்டிவ் உறுதிய செய்யப்பட்ட பல நோயாளர்கள் தத்தம் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டள்ளார்கள். எனீனும் தற்போது சென் காலன் மருத்துவமனையில் 35 நோயாளிகள் இருப்பதாகவும் அதில் 8 பேர் தீவிர கண்காணிப்பு பிரிவில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டள்ளது.

இதுவரை சுவிற்சர்லாந்தில கோவிட் 19 நோய்க்கு இதுவரை 24,360 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டியிருக்கிறது. கோவிட் 19 நோய் தொடர்பாக இறந்தவர்களின் எண்ணிக்கை 9,492 ஆகும். பிஏஜி படி, 11,557 பேர் தனிமையில் உள்ளனர்.

தொடர்பு தடமறிதல் காரணமாக 20,303 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், ஆபத்தான நாட்டிலிருந்து திரும்பி வந்த 3,577 பேர் தனிமைப்படுத்தலில் இருந்தனர். உள்ளார்கள். தடுப்பூசியை பொறுத்தமட்டில் இதுவரை கிட்டத்தட்ட 400,000 முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts