Image default
Swiss Local NewsZurich

சூரிச் Regensdorf இல் பேருந்து மீது மோதிய கார்.! 4 பேர் படுகாயம்.!

சூரிச் Regensdorf இல் பேருந்து மீது மோதிய கார்.! 4 பேர் படுகாயம்.! சூரிச் கன்டோனில் இன்று திங்கட்கிழமை மதியம் (ஜனவரி 23, 2023) Regensdorf என்ற இடத்தில் பயணிகள் கார் ஒன்று பேருந்து மீது நேருக்கு நேர் மோதியதில் டிரைவர் மற்றும் பேருந்தில் பயணம் செய்த மூன்று பேர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில் :-

இன்று திங்கட்கிழமை பிற்பகல் 2 மணியளவில், 54 வயதுடைய ஓட்டுநர் ஒருவர் Neuen Dällikerstrasse வீதியில் இருந்து Dällikon திசையில் ஓட்டிக்கொண்டிருந்தார்,  எதிரே வந்த பேருந்தை கவனிக்காமல் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவம் ஏற்பட்டுள்ளது.

சூரிச், Regensdorf, swisstamil, tamilswiss

இதன்போது பேருந்தில் இருந்த பயணி ஒருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. Limmattal மருத்துவமனை மற்றும் சூரிச் பாதுகாப்பு மற்றும் மீட்புப் பிரிவினரின் மீட்புப் பணிகள் மூலம் இருவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

மேலும் இரு பயணிகளுக்கு காயம் ஏற்பட்ட நிலையில் மீட்பு படையினரால் சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. விபத்துக்கான காரணத்தை சூரிச்சில் உள்ள கன்டோனல் போலீசார் மற்றும் வின்டர்தூர்/அண்டர்லேண்டில் உள்ள அரசு வழக்கறிஞர் அலுவலகம் விசாரித்து வருகிறது.

சுவிஸ் நாட்டில் பிரபாகரன் , பொட்டு உயிருடன் புதிய செய்தி உண்மையா? (வீடியோ)

கவனக்குறைவே விபத்துக்கான காரணம் என ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. எனினும் முழுமையான காரணங்கள் என்ன என்பது தொடர்பாக போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள்.

விபத்து காரணமாக, Neue Dällikerstrasse சுமார் இரண்டரை மணிநேரம் போக்குவரத்துக்கு மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்தின் உள்ளுர் செய்திகள் முதல் அத்தனை விடயங்களையும் அறிந்து கொள்ள SwissTamil24.Com எமது இணையத்தளத்தினை தினமும் பார்வையிடுங்கள்.

Advertisements

Related posts

Bilten GL A3 நெடுஞ்சாலையில் அதிகவேகமாக பயணித்த கார் விபத்துக்குள்ளானது

admin

லுசேர்ன் நகரில் கார்களை சேதப்படுத்தும் மர்ம நபர்கள்..!!

admin

ஆர்காவ் கன்டோனில் இளைஞர்களால் சாரமாரியாக குத்தப்பட்ட நபர்.!!

admin