சூரிச் Meilen ஏரியில் தீப்பிடித்து எரிந்த படகு..! (படங்கள் இணைப்பு)
சூரிச் Meilen ஏரியில் தீப்பிடித்து எரிந்த படகு..! (படங்கள் இணைப்பு) புதன்கிழமை மாலை, சூரிச் ஏரியின் Meilen என்ற இடத்தில் கரையோரத்தில் ஒரு படகு தீப்பிடித்தது. தீப்பிழம்புகள் தூரத்திலிருந்து தெரிந்தன.
தீ விபத்து ஏற்பட்டபோது, ஒரு நபர் படகில் இருந்ததால், தண்ணீரில் குதித்து உயிர் ஆபத்து இன்றி தப்பித்துக்கொண்டார்.
அந்த நபருக்கு லேசான தீக்காயம் ஏற்பட்டது. கடல் மீட்புப் படையினருடன், மீட்பு பணிகளுக்காக தீயணைப்புப் படையினரும் ஈடுபடுத்தப்பட்டனர். ஆனால், குறித்த நேரத்தில் படகை மீட்க முடியாமல் போனமை குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக படகு சிறிது நேரத்தில் ஏரியில் முற்றாக மூழ்க்கிப்போயிருந்தது. அதனை தொடர்ந்து இன்று வியாழன் பிற்பகலில், சூரிச் கன்டோனல் காவல்துறை, கடல்சார் காவல்துறை மற்றும் ஒரு மீட்பு சேவையுடன் சேர்ந்து, படகு சிதைவை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
சூரிச் ஏரியில் இருந்து படகை இழுக்க சுமார் 15 பேர் ஈடுபடுத்தப்பட்டனர். “மீட்பின் போது பலத்த காற்று வீசியமையினால் மீட்பு பணிகள் சிரமானதாக இருந்ததாக மீட்பு பணியை மேற்கொண்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
படகு விபத்துக்கான காரணம் இருவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை. சூரிச் கன்டோன் போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
படங்கள் உதவி :- 20min.ch