முக்கிய செய்திகள்

சூரிச் நகைக் கடைகளில் புகுந்து மில்லியன் கணக்கில் கொள்ளை.!!

zurich nakai kadai

சூரிச் நகைக் கடைகளில் புகுந்து மில்லியன் கணக்கில் கொள்ளை.!!

சுவிட்சர்லாந்தில் நகைக் கடைகளில் புகுந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட செர்பிய இளைஞருக்கு 8 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டுள்ளது. செர்பிய நாட்டவரான 28 வயது இளைஞர் சூரிச் பகுதியில் உள்ள முக்கியமான இரண்டு நகைக் கடைகளில் புந்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளார்.

பிங்க் பாந்தர் கும்பலை சேர்ந்த அந்த இளைஞர் 2017 மே மாதம் ஒரு நகைக்கடைக்குள் புகுந்து சுமார் ஒரு மில்லியன் பிராங்குகள் மதிப்பிலான பொருட்களை அள்ளிச் சென்றுள்ளார்.

அடுத்த 6 மாதங்களில் சில கூட்டாளிகளுடன் மீண்டும் ஒரு நகைக் கடையில் புகுந்த அவர் அப்போது 250,000 பிராங்கள் மதிப்பிலான பொருட்களை கொள்ளையிட்டு சென்றுள்ளார்.

சூரிச் நகைக் கடைகளில்
சூரிச் நகைக் கடைகளில் புகுந்து மில்லியன் கணக்கில் கொள்ளை.!!

ஆனால் இந்த முறை சுதாரித்துக் கொண்ட சூரிச் பொலிசார், டிராம் ஒன்றில் தப்பிய அவரை சாமர்த்தியமாக சுற்றி வளைத்து, கையும் களவுமாக கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கு விசாரணையில், அந்த இளைஞர் அளித்த வாக்குமூலம் சுவிஸ் விசாரணை அதிகாரிகளை குழப்பத்தில் ஆழ்த்தியதாக கூறப்படுகிறது.மட்டுமின்றி, அவர் கூறிய தகவல் நம்பும்படியாக இல்லை எனவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

செர்பியாவில் உள்ள தமது குடும்பத்தை மிரட்டியே, சுவிட்சர்லாந்தில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட தம்மை கட்டாயப்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார். மட்டுமின்றி ஏராளமான கடன் இருப்பதாகவும், அதில் இருந்து மீள, தமக்கு வேறு வழி தெரியவில்லை எனவும்,

அதனாலையே அந்த கும்பலின் கட்டாயத்திற்கு தாம் கட்டுப்பட்டதாகவும் அந்த இளைஞர் நீதிமன்றத்திலும் தெரிவித்துள்ளார். ஆனால் அந்த கும்பல் தொடர்பில் அவர் விசாரணை அதிகாரிகளிடம் உரிய தகவலை அளிக்கவில்லை என்றே கூறப்படுகிறது.

இந்த நிலையில், வழக்கு விசாரணை முடிவுக்கு வந்ததால், குறித்த இளைஞருக்கு 8 ஆண்டுகள் சிறைவாசமும், 10 ஆண்டுகள் சுவிட்சர்லாந்தில் இருந்து வெளியேற்றப்படுவார் எனவும் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

Related posts