சூரிச் நகரில் உள்ள தேவாலயம் ஒன்றில் நேற்று இடம்பெற்ற சம்பத்தினால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சனிக்கிழமை 10 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:-
சூரிச்சின் நகரத்தில் Brahmsstrasse ல் உள்ள தேவாலயத்தில் அறை ஒன்றுக்குள் சென்ற வயோதிபர் ஒருவர் தன்னை தானே கத்தியால் குத்த முயற்சி மேற்கொண்டுள்ளார்.
அதனால் அங்கிருந்தவர்கள் உடனடியாக சூரிச் போலீசாருக்கு அவசர தகவல் வழங்கியுள்ளார்கள். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இவரை சமாதான படுத்த முயன்ற போதும் முயற்சி கைகொடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த முதியவர் 60 வயது நிரம்பியவர் என்றும் போலீசாரால் அவரை சமாளிக்க முடியாமல் போனதையிடுத்து முதியவரின் காலில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.
இதனால் அந்த இடம் சற்று பரபரப்பாக காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் முதியவரை கைது செய்த போலீசார் அவரை உடனடியாக அவசர தீவிர சிகிச்சை பிரிவில் அறுவைச்சிகிச்சைக்காக அனுமத்துள்ளாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவம் தொடர்பாக தடவியல் நிபுணர்களும் போலீசாரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.