சுவிஸ் லுசேர்ன் A2 நெடுஞ்சாலையில் கோர விபத்து : 24 கார்கள் சேதம் (அதிர்ச்சி வீடியோ) இன்று காலை லுசேர்ன் மாகாணத்தின் Knutwil A2 நெடுஞ்சாலையில் பாரிய வாகன விபத்து ஏற்பட்டுள்ளது. நெடுஞ்சாலையில் பயணித்த 24 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இவ்விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தின் போது எட்டு பேர் காயமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ்கள் மற்றும் மீட்பு ஹெலிகாப்டர் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

மேலும் 15 பேர் மேலும் சிகிச்சைக்க அனுமதிக்கப்பட்டள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாரிய விபத்து சம்பவத்தினால் தெற்கு நோக்கி செல்லும் AUTOBHAN பல மணி நேரம் முழுமையாக மூடப்பட்டு தற்போது மீண்டும் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை, டிசம்பர் 30, 2022 அன்று, காலை 8:30 மணிக்குப் பிறகு, தெற்கே பயணிக்கும் Knutwil உள்ள A2 நெடுஞ்சாலை வாகனக்குவியலாகவே காட்சியளித்ததாக அங்கிருந்த எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார். மொத்தம் 24 வாகனங்கள் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இவ்வாறு விபத்துக்குள்ளாவது மிகவும் அரிதாகவே நடக்ககூடிய ஒன்றாக இருக்கிறது.

எனினும் இச்சம்பவம் தற்போது இடம்பெற்றிருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. விபத்து நடந்த இடத்தில் இருந்து 8 பேர் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் மீட்பு ஹெலிகாப்டர் மூலம் சுற்றியுள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட மற்ற மக்கள் அனைவரும் போக்குவரத்து வாகனங்கள் மூலம் அவர்கள் பராமரிக்கப்படும் ஒரு சேகரிப்பு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.
தொடர்பாக விசாரணைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.. ஏராளமான புளூ லைட் அமைப்புகளும், பல இழுவைச் சேவைகள், ஜெண்ட்ராஸ் ஊழியர்கள், முதலியனவும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விபத்தினால் ஏற்பட்ட சொத்து சேதத்தை தற்போது கணக்கிட முடியாதுள்ளது.

A2 நெடுஞ்சாலை தெற்கு நோக்கி பல மணி நேரம் மூடப்பட்டது. வடக்கு நோக்கிய போக்குவரத்து ஓரளவிற்கு ஒற்றைப் பாதையாகவும் தற்காலிகமாக பலமுறை மூடப்பட்டும் காணப்பட்டன. இந்த விபத்தால் அப்பகுதி முழுவதும் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பிற்பகல் 3.00 மணிக்கு சற்று முன்னர், தெற்கு நோக்கி செல்லும் நெடுஞ்சாலை மீண்டும் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டு திறக்கப்பட்டு மீண்டும் நிலமை வழமைக்கு திரும்பியமை குறிப்பிடத்தக்கது.
மேலும் சுவிற்சர்லாந்தின் உள்ளுர் செய்திகள் முதல் அத்தனை விடயங்களையும் அறிந்து கொள்ள SwissTamil24.Com எமது இணையத்தளத்தினை தினமும் பார்வையிடுங்கள்.