சுவிஸ் பாசல் Rhein நதிக்கரையில் கைக்குண்டு மீட்பு.! நேற்று, செவ்வாய்க்கிழமை மாலை, பிப்ரவரி 7, 2023, ஒரு படகு ஓட்டுநர் சுவிஸ் பாசல் நகர ரைனில் ஒரு கைக்குண்டு இருப்பதைக் கண்டுபிடித்து, பாசல்-கன்டோனல் போலீஸுக்குத் தெரிவித்தார்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர் மற்றும் இராணுவத்தினர் விரைந்து கைக்குண்டை பாதுகாப்பாக மீட்கும் பணியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் குறித்த கைக்குண்டு இன்று காலை பாதுகாப்பான இடத்தில் வெடிக்கவைக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்கிழமை மாலை, Rhine in Grossbasel உள்ள Rhine நதிக்கரையில் Weidling எனப்படும் படக்கு சவாரி செய்யும் ஒருவர், Rhine ல் ஒரு கைக்குண்டு கண்டதும் உடனடியாக நகர காவல்துறைக்கு தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர் கமாண்டோ, இராணுவ காவல்துறை, தொழில்முறை தீயணைப்புப் படை மற்றும் Basel-Stadt மீட்புக் குழு மற்றும் கப்பல் காவல்துறையினரும் இணைந்து குறித்த கைக்குண்டை பாதுகாப்பாக மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்கள்.
மீட்பு பணியில் எந்த அசம்பாவிதங்களும் ஏற்பட்டிருக்கவில்லை. மேலும் மீட்பு நடவடிக்கைகளின் போது போக்குவரத்து தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் சுவிற்சர்லாந்தின் உள்ளுர் செய்திகள் முதல் அத்தனை விடயங்களையும் அறிந்து கொள்ள SwissTamil24.Com எமது இணையத்தளத்தினை தினமும் பார்வையிடுங்கள்.