முக்கிய செய்திகள்

சுவிஸ் நாட்டில் லவுசான் மாநில தேர்தலில் போட்டியிட்ட இரு தமிழர்களும் வெற்றி

Lausanne

சுவிஸ் நாட்டில் லவுசான் மாநில தேர்தலில் போட்டியிட்ட இரு தமிழர்களும் வெற்றிபெற்றுள்ளனர். சுவிஸ் நாட்டின் லவுசான் மாநிலத்தில் 07.03.2021 இடம்பெற்ற தேர்தலில் இரு வேறுகட்சிகளில் போட்டியிட்ட தமிழர்கள் இருவரும் வெற்றிபெற்றுள்ளனர்.

தம்பிப்பிள்ளை நமசிவாயம் அவர்கள் 8176 வாக்குகளை பெற்று மாநில தேர்தலில் வெற்றிபெற்றுள்ளார். இந்த வெற்றியுடன் தொடர்ச்சியாக நான்காவது தடவை லவுசான் மாநிலத்தில் வெற்றிபெற்று தமிழர்கள் என்ற சாதனையை படைத்துள்ளார்.

அடுத்துதாக தேர்தலில் முதல் தடவையாக போட்டியிட்ட கந்தையா போள்ராஜ் 6141 வாக்குக்களை பெற்று வெற்றிபெற்று லவுசான் மாநிலத்தில் வெற்றிபெற்ற முதல் தமிழ் இளையவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இதே வேளை சொலர்த்தூண் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலிலும் தமிழ் பெண் ஒருவர் தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவர்களது அரசியல் பணி சிறப்புற சுவிஸ் தமிழர்கள் சார்பாக நாமும் (SwissTamil24.Com) வாழ்த்துவோம்.!!

Thampi pillai Namasivayam Kandaia paul Raj

 

Related posts