Image default
Swiss headline News

சுவிஸ் நாட்டில் தமிழர்களை பலியெடுத்த விபத்து.! நடந்தது என்ன.? விரிவான தகவல்கள்

சுவிஸ் நாட்டில் தமிழர்களை பலியெடுத்த விபத்து.! நடந்தது என்ன.? விரிவான தகவல்கள் சுவிற்சர்லாந்து நாட்டில் கடந்த 21.01.2023 சனிக்கிழமை ஆர்கவ் (Aarau ) மாநிலத்தின் பாடன் (Baden) எனுமிடத்தில் வீதியில் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வாகனம் கோரவிபத்துக்குள்ளாகிய நிலையில் தலைகீழாக கிடந்தது. இத்தனைக்கும் உயர்தர வாகன நிறுவனமான மெர்சடெஸ் மகிழுந்தே இப்படி விபத்துக்குள்ளான வாகனமாகும்.

இதில் புலம்பெயர் ஈழத்தமிழர்களாகிய யாழ்ப்பாணம் சுழிபுரத்தைச் சேர்ந்த தந்தையும் , மகனும் உயிரை இழந்துள்ளனர் . மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழக்க தந்தை கோமாநிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 2ம் நாள் அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சுவிஸ், சூரிச், இன்றைய சுவிஸ் செய்திகள், சுவிஸில், சுவிஸ் தமிழர், சுவிஸ் தமிழ், சுவிஸ் செய்திகள் தமிழ், சுவிஸ் மக்கள் தொகை, சுவிஸ் பற்றிய தகவல், தமிழ் சுவிஸ், SwissTamilNews, TamilSwiss, Lankasri, SwissInfo

இத்தனைக்கும் இதே குடும்பத்தைச் சேர்ந்த 19 வயது மகளே வாகனத்தை ஓட்டியுள்ளார். தாயாரின்குடும்ப நண்பி ஒருவரும் வாகன சாரதியான மகளும் சிறு காயங்களுடன் தப்பித்துள்ளனர். தாயார் கழுத்தில் பலத்த காயங்களுடன் பல அறுவை சிகிச்சைகள் செய்யவேண்டிய சூழ்நிலையில் மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டுள்ளார்.

GermanyKeralaAyurvedic, சுவிஸ், சூரிச், இன்றைய சுவிஸ் செய்திகள், சுவிஸில், சுவிஸ் தமிழர், சுவிஸ் தமிழ், சுவிஸ் செய்திகள் தமிழ், சுவிஸ் மக்கள் தொகை, சுவிஸ் பற்றிய தகவல், தமிழ் சுவிஸ், SwissTamilNews, TamilSwiss, Lankasri, SwissInfo

சுவிஸ் நாட்டில் 18 வயதில் வாகன ஓட்டுனர் அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ளக்கூடிய சூழ் நிலையில் ஓராண்டு மட்டுமே பூர்த்தியாகி இருக்கக்கூடிய சூழலில் (சில ஆண்டுகள் உறுதி செய்யப்படாத ஓட்டுனர் உரிமம் உள்ள நிலையில்) நள்ளிரவு 02.30 மணியளவில் வாகனத்தை ஓட்டுவதற்கு எப்படி பெற்றோரால் அனுமதிக்க முடியும் என்பதும்? ஏன் தந்தை வாகனத்தை ஓட்டவில்லை என்பதும் புரியவில்லை! இவர்கள் குடும்ப நிகழ்வொன்றிற்காக லவுசான் (VD) மாநிலத்தில் இருந்து தாம் வசிக்கும் செங்காலன் (SG) மாநிலம் நோக்கி சுமார் 300 km வரை செல்லவேண்டியதூரம்வாகனத்தை ஓட்டி வந்துள்ள நிலையில் இடைநடுவே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

READ ALSO THIS :- சுவிஸ் Aargau மாநில விபத்தில் இலங்கை தமிழர்கள் மரணம்! வெளியான புகைப்படம்

வாகனம் ஓட்டுவதும் அதில் தமக்கு அதீத திறமை இருப்பதாகவும் இன்னும் பலர் வீறாப்புக் காட்டுவதும் தம்மை ஓர் சூமாகர் கார்ப்பந்தய வீரராகவே எண்ணிக்கொண்டிருக்கிறார்கள், விபத்து என்பது ஒரு வினாடியில் நிகழ்ந்தேறி விடுகிறது!

சுவிஸ், சூரிச், இன்றைய சுவிஸ் செய்திகள், சுவிஸில், சுவிஸ் தமிழர், சுவிஸ் தமிழ், சுவிஸ் செய்திகள் தமிழ், சுவிஸ் மக்கள் தொகை, சுவிஸ் பற்றிய தகவல், தமிழ் சுவிஸ், SwissTamilNews, TamilSwiss, Lankasri, SwissInfo

பனிக்காலமும், நித்திரை ஒருபுறமும், ரஷ்ய உக்ரைன் யுத்தத்தால் ஐரோப்பிய நாடுகளில் மின்சாரச் செலவை மிச்சப் படுத்த வீதியோர மின்விளக்குகள் பல நிறுத்தப்பட்டுள்ள இந்த இருண்ட சூழல் இவர்களது வாழ்வைப் பறித்துள்ளது.

பொலிசார் விபத்துக்குள்ளானவர்களை போதைவஸ்துக்கள் பாவித்துள்ளனரா?

எனப்பரிசோதித்து இல்லையென்ற முடிவுக்கு வந்தபின் சோர்வும் தூக்க கலக்கமும் காரணமாக இருக்கலாம் என நம்புவதாக ஊர்ஜிதப்படுத்தாத தகவல்கள் தெரிவிக்கின்றன! இரவிரவாக Ausgang வெளியில் ஊர்சுற்றுக்கேளிக்கைக்கு செல்லும் பல தமிழ் இளைஞர் யுவதிகள் இவற்றை கவனத்தில் கொள்வது ரெம்ப முக்கியம்.

சுவிஸ், சூரிச், இன்றைய சுவிஸ் செய்திகள், சுவிஸில், சுவிஸ் தமிழர், சுவிஸ் தமிழ், சுவிஸ் செய்திகள் தமிழ், சுவிஸ் மக்கள் தொகை, சுவிஸ் பற்றிய தகவல், தமிழ் சுவிஸ், SwissTamilNews, TamilSwiss, Lankasri, SwissInfo

உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்! இந்த உலகில் இழந்தால் மீண்டும் வராதது உயிரும், மானமும் என்பதை கவனத்தில்கொண்டு இளம் கன்று பயமறியாது என்பதை விடுத்து அறிவார்ந்து சிந்தித்து செயல்படவே இச்சம்பவத்தை பதிவிடமுனைந்தேன்!

வாகன விபத்தால் உயிரிழப்போர் கதை அன்றோடு முடிந்து விடுகிறது! ஆனால் உயிர்பிழைத்து வலுவிழந்தோராக ஆயுள்முழுவதும் சிரமப்பட்டு வாழ்வோரை பாருங்கள், உங்கள் வாழ்வை அது விபத்தில் இருந்து காக்கும். உடல் உபாதைகள் கழிக்கவே இளமைக்காலத்தில் இருந்து இன்னொருவர் உதவியை நாடி ஆயுட்காலம்வரை முகச்சுழிப்போடு வாழ்தல் நலமா..?

சுவிஸ், சூரிச், இன்றைய சுவிஸ் செய்திகள், சுவிஸில், சுவிஸ் தமிழர், சுவிஸ் தமிழ், சுவிஸ் செய்திகள் தமிழ், சுவிஸ் மக்கள் தொகை, சுவிஸ் பற்றிய தகவல், தமிழ் சுவிஸ், SwissTamilNews, TamilSwiss, Lankasri, SwissInfo
சுவிஸ் Aargau மாநிலத்தில் A1 நெடுஞ்சாலையில் நடந்த கோர விபத்து

வேகக் கட்டுப்பாடு சாலை விதிகளை மதித்தல் என்பன உங்கள் நலனுக்காகவே அன்றி அந்தந்த நாட்டின் நன்மைக்காக அன்று..! காவல்துறையினரும் மருத்துவரும் தாதிகளும் கூட உம்மைப்போல் சக மனிதர்களே …! உம் பெற்றோர் உங்கள் நன்மைக்காக சொல்லும் அறிவுரை கேட்டு நடவுங்கள் நள்ளிரவுப் பயணங்களை முடிந்தவரை தவிருங்கள்.

சுவிஸ், Aargau,தமிழ் இளைஞர், சிகிச்சை, swisstamilnews

தவிர்க்கமுடியாத நள்ளிரவுப்பயணங்கள் செய்யவேண்டி இருப்பின் ,வயதில் மூத்ததோர் அனுபவம் வாய்ந்தோர் வாகனங்களை ஓட்டுங்கள் ஒரு வினாடி கவனக்குறைவு என்பதுகூட எல்லாவிதத்திலும் அழிவையே பரிசளிக்கும் .

உயிரிழந்தோர்க்கு அனுதாபங்களைதெரிவித்துக்கொள்கிறேன் !
“பாதுகாப்பு முதன்மையானது வாழ்க்கை பிறகானது”
தீராக்கனலுடன்: தீவகன்

மேலும் சுவிற்சர்லாந்தின் உள்ளுர் செய்திகள் முதல் அத்தனை விடயங்களையும் அறிந்து கொள்ள SwissTamil24.Com எமது இணையத்தளத்தினை தினமும் பார்வையிடுங்கள்.

Advertisements

Related posts

சுவிஸில் வாகன தரிப்பு கட்டணங்கள் கட்டுப்படுத்த வேண்டுமென கோரிக்கை

admin

சுவிஸ் விமான நிறுவனத்தில் வேலை செய்ய ஆசையா..? அரிய வாய்ப்பு.!!

admin

சுவிட்சர்லாந்தில் கோவிட் மரணங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

admin