முக்கிய செய்திகள்

சுவிஸ் நாட்டின் மூன்று பிரதான மாநிலங்களில் இடம்பெற்ற தமிழின அழிப்பு கவனயீர்ப்பு நிகழ்வு

swiss may18

சுவிஸ் நாட்டில் இடம்பெற்று வருகின்ற மனிதநேய ஈருருளி பயணத்தினை வலுப்படுத்தும் நோக்கோடு சுவிஸ் நாட்டின் பல மாநிலங்களில் கவனயீர்ப்பு நிகழ்வுகள் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக நேற்றைய தினம் கிளாரவுஸ், சொலத்தூண், பிறிபேர்க் ஆகிய மாநிலங்களில் தமிழர்களுக்கு 2009ம் ஆண்டு இடம்பெற்ற அதிஉச்ச இனழிப்பை சித்தரிக்கின்ற அக்காலத்தில் எடுக்கப்பட்ட பிரத்தியோகமான படங்களும் அதனை சித்தரிக்கும் வகையில் சுவிஸ் நாட்டில் பிறந்த தமிழ் இளையவர்களால் வரையப்பட்ட ஓவியங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

அதனை பார்வையிட சென்ற வெளிநாட்டவர்களுக்கு சுவிஸ் நாட்டில் பிறந்த தமிழ் இளையவர்கள், மற்றும் தமிழ் உணர்வாளர்களால் தமிழர்களது இன அழிப்பு சார்ந்து விளக்கங்கள் கொடுக்கப்பட்டதுடன் துண்டுப்பிரசுர வினியோகங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

186495009 313415846963867 7417561186356590127 n

Related posts