முக்கிய செய்திகள்

சுவிஸ் நாட்டின் சொலர்த்தூண் மாநில சபைக்கு தெரிவான முதலாவது தமிழ் பெண்

Farah-Rumy-Soluthurn

சுவிஸ் நாட்டின் சொலர்த்தூண் மாநில சபைக்கு தெரிவான முதலாவது தமிழ் பெண் – சுவிஸ் நாட்டின் சொலர்த்தூண் மாநில சபைக்கு தெரிவான முதலாவது தமிழ் பெண்.கடந்த 07.03.2021 (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற சொலர்த்தூண் மாநிலத்துக்கான தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட 23 பேரில் முதலாவதாக தேர்வு செய்யப்பட்ட தமிழ் பெண் என்ற பெருமையை பெற்றுக்கொண்டுள்ளார்.

1991 ஆண்டு பிறந்து தற்போது ஒரு தாதியாக கடமையாற்றி வருகின்ற தமிழ் பேசும் முஸ்லிம் மதத்தை சேர்ந்த Farah Rumy எனும் பெண்ணே இவ்வாறு தேர்வு செய்யப்பட்ட நபர் ஆவார்.

சுவிஸ் நாட்டின்,சொலர்த்தூண்,மாநில சபை,முதலாவது தமிழ் பெண்

தனது வெற்றி குறித்து கருத்து வெளியிட்டுள்ள சாரா 3522 வாக்குகள் பெற்று மக்களால் தெரிவுசெய்யப்பட்டுள்ளேன்.. தேர்தல் முடிவு குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கன்டோனல் கவுன்சிலராக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். கன்டோனல் கவுன்சிலில் உள்ள மக்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்த நான் உந்துதல் பெறுகிறேன், அனைவருக்கும் அவர்கள் அளித்த ஆதரவிற்கும் அவர்கள் நம்மீது வைத்திருக்கும் நம்பிக்கையுக்கும் நன்றி!

இவரது அரசியல் பணி சிறப்புற சுவிஸ் தமிழர்கள் சார்பாக நாமும் SwissTamil24.Com வாழ்த்துவோம்.!!

 

Related posts