சென் கேலன்ஸ் கான்டனில் கொள்ளைச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த சனிக்கிழமை சென் கேலன்ஸின் பாடி என்னும் பகுதியில் கொள்ளைச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
பண வைப்பு பெட்டகமொன்று உடைக்கப்பட்டு பணம் களவாடப்பட்டுள்ளது. ஹீர்பிரக் என்னும் இடத்திலும் இரண்டு கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சென் கேலன் கான்டனில் சுமார் 12 கொள்ளைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். வர்த்தக நடவடிக்கைகள் இடம்பெற்று வரும் பகுதிகளில் இவ்வாறான பல கொள்ளைச் சம்பவங்கள் பதிவாகி வருவதாக பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வழமைக்கு மாறான அடிப்படையில் கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகவும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.