முக்கிய செய்திகள்

சுவிஸ் சிறையிலிருந்து பயங்கர குற்றவாளி தப்பி ஓட்டம்

சுவிஸ்

சுவிஸ் சிறையிலிருந்து பயங்கர குற்றவாளி தப்பி ஓட்டம்

பயங்கர குற்றவாளி என வர்ணிக்கப்பட்டுள்ள நபர் ஒருவர் சுவிஸ் சிறைச்சாலை ஒன்றிலிருந்து தப்பியோடிவிட்டார்.

பல நாடுகளில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த, ஆபத்தான அந்த நபர், சூரிச்சிலுள்ள சிறைச்சாலை ஒன்றிலிருந்து தப்பி விட்டார். 17 வயதான Miran என்னும் அந்த நபர், 2019 Christchurch தாக்குதல்களின்போது, தாக்குதலுக்கு ஆதரவாக செய்திகள் வெளியிட்டவராவார்.

எப்படி Christchurchஇல் தாக்குதல்கள் நடத்தப்பட்டதோ, அதேபோல் சுவிட்சர்லாந்தில் தானும் தாக்குதல்கள் நடத்த விரும்புவதாக சமூக ஊடகங்களீல் செய்தி பரப்பியிருந்தார் Miran.

அத்துடன், வெடி குண்டு தயாரிப்பது எப்படி என அவர் இணையத்தில் தேடியதுடன், ஹைட்ரோகுளோரிக் அமிலம் முதலான சில ரசாயனங்களை ஆர்டர் செய்த அவர், நான் இஸ்லாமியர்களைக் கொல்லப்போகிறேன் என இணையத்தில் செய்தி வெளியிட்டிருந்தார்.

சுவிட்சர்லாந்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஏன் சுவிஸ் குடியுரிமை இல்லை..?

இது தொடர்பாக பிரித்தானிய அதிகாரிகள் சுவிஸ் அதிகாரிகளை தொடர்பு கொண்டிருந்தார்கள். அந்த நபர் Sankt Gallen பகுதியைச் சுற்றியுள்ள மசூதிகளை தாக்க திட்டமிட்டிருந்ததாக பொலிசார் நம்புகிறார்கள்.

சுவிஸ்
சுவிஸ் சிறையிலிருந்து பயங்கர குற்றவாளி தப்பி ஓட்டம்

Miran கைது செய்யப்பட்டு இளைஞர் சிறை ஒன்றில் அடைக்கப்பட்டிருந்தார். ஆனால், அவர் சில மாதங்களுக்கு முன் தப்பியோடி விட்டார்.

அவர் எங்கிருக்கிறார் என கண்டுபிடிக்கமுடியவில்லை. அவர், தன் குடும்பத்தார் வாழ்ந்துவந்த Balkans என்ற இடத்துக்கு ஓடியிருக்கலாம் என கருதப்படுகிறது.

 

 

source

Related posts