முக்கிய செய்திகள்

போதை மருந்துடன் சுவிஸ் இளைஞர் ஜேர்மன் போலீசாரால் கைது

சுவிஸ் இளைஞர்,ஜேர்மன் போலீசாரால் கைது

போதை மருந்துடன் சுவிஸ் இளைஞர் ஜேர்மன் போலீசாரால் கைது-  தடைசெய்யப்பட்டுள்ள கஞ்சா பொருட்களுடன் சுவிஸ் இளைஞர் ஒருவர் பொலிசாரிடம் சிக்கியுள்ளார். சுவிட்சர்லாந்தின் பாஸல் மண்டலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் 2.63 கிலோ போதை மருந்துடன் ஜேர்மன் பொலிசாரிடம் சிக்கியுள்ளார்.

பாஸல் மண்டலத்தை சேர்ந்த 24 வயதேயான அந்த இளைஞர் பிப்ரவரி மாத இறுதியில் போதை மருந்துடன் பொலிசாரிடம் சிக்கியதாக கூறப்படுகிறது.

வாகன சோதனையில் இருந்து தப்ப முயன்ற அந்த இளைஞரை பொலிசார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். விளையாட்டு பொருட்கள் கொண்டு செல்ல பயன்படுத்தும் பை ஒன்றில் போதை மருந்துடன் சிக்கியுள்ளார் குறித்த இளைஞர்.

சுவிஸ் இளைஞர்,ஜேர்மன் போலீசாரால் கைது

தற்போது இந்த விவகாரம் தொடர்பில் ஜேர்மன் பொலிசார் விசாரணை முன்னெடுத்து வருகின்றனர். அவர் தொடர்பில் மேலதிக தகவல்களை வெளியிடவும் பொலிஸ் தரப்பு மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Related posts