சுவிஸ் இராணுவம் ஏதிலிகளுக்கான தங்குமிட வசதிகளை செய்து கொடுப்பதில் முனைப்பு. ஏதிலிகளுக்கான தங்குமிட வசதிகளை செய்து கொடுக்கும் முனைப்புக்களுக்கு சுவிட்சர்லாந்து இராணுவம் உதவுகின்றது. குடியேற்றத்திற்கான சுவிட்சர்லாந்து செயலகத்திற்கு இவ்வாறு உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஏதிலிகள் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுவிட்சர்லாந்தில் அடைக்கலம் கோரும் ஏதிலிகளுக்கு உதவும் நோக்கில் சுமார் 500 படையினர் கடைமையில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் மாதங்களில் ஏதிலிகளுக்கு உதவுவதற்கும், தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் கூடுதல் வளங்கள் தேவைப்படுவதாக அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
குறிப்பாக உக்ரைன் ஏதிலிகள் எண்ணிக்கை தொடர்ச்சியாக உயர்வடைந்து செல்வதாகவும் அவர்களுக்கு போதியளவு தங்குமிட வசதிகள் செய்து கொடுக்க வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.