முக்கிய செய்திகள்

சுவிஸில் மாயமான இளம்பெண்… சகோதரி கூறும் அதிர்ச்சி பின்னணி

சுவிஸில்

சுவிட்சர்லாந்தில் இரட்டையர்களில் ஒருவரான 21 வயது இளம்பெண் மாயமான நிலையில், அவர் கடத்தப்பட்டிருக்கலாம் என சகோதரி சந்தேகம் தெரிவித்துள்ளார்.

லூசர்ன் மண்டலத்தில் Adligenswil பகுதியை சேர்ந்த 21 வயது Alishia Bucher என்பவர் ஏப்ரல் 21 முதல் காணாமல் போயுள்ளார்.

அவர் தொடர்பில், அவரது இரட்டை சகோதரியும், பொலிசாரும் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர்.

Thulasi-Thirumana-Sevai

ஏப்ரல் 21 இரவு சுமார் 10.30 மணியளவில் தமது சகோதரியை கடைசியாக சந்தித்துக் கொண்டதாக செலினா தெரிவித்துள்ளார். மட்டுமின்றி ஏப்ரல் 22 மற்றும் 23ம் திகதி இரவில் இருவரும் மொபைலில் தொடர்பு கொண்டு பேசியதாகவும் செலினா தெரிவித்துள்ளார்.

அதிகாலை 4 மணியளவில் தம்மை ஒருமுறை தொடர்பு கொண்டதாக தெரிவித்துள்ள செலினா, அப்போது தமக்கு உடல்நிலை சரியில்லை என தெரிவித்ததாகவும், அந்த நேரம் அவர் வாகனம் ஒன்றில் பயணப்படுவதாக தாம் புரிந்து கொண்டதாகவும்,

மொபைலில் தாங்கள் பேசுவது அடிக்கடி தடைபட்டதாகவும், பின்னர் அழைப்பு துண்டிக்கப்பட்டதாகவும், அதனையடுத்து இதுவரை தம்மால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் செலினா தெரிவித்துள்ளார்.

சுவிஸில்,மாயமான,இளம்பெண்,அதிர்ச்சி பின்னணி
சுவிஸில் மாயமான இளம்பெண்… சகோதரி கூறும் அதிர்ச்சி பின்னணி

அதிகாலையில், தமது சகோதரியுடன் சென்ற மூவர் கும்பலே தமது சகோதரி மாயமாவதற்கு காரணம் என செலினா பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்த வழக்கு தொடர்பில் விசாரணை மேற்கொண்டுவரும் பொலிசார், சந்தேகப்படும் வகையில் இதுவரை எந்த தகவலும் தங்களுக்கு கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.

தற்போது தமது சகோதரி Alishia Bucher தொடர்பில் துண்டுப்பிரசுரங்களை பொதுமக்களுக்கு அளித்து உதவி கோரி வருகிறார் செலினா.

Related posts