சுவிஸில் தண்டனை பெறப்போகும் கொலம்பிய போதைப் பொருள் வர்த்தகர்.!! கொலம்பியாவின் பிரபல போதைப் பொருள் வர்த்தகர் ஒருவருக்கு சுவிட்சர்லாந்து நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது. குறித்த நபருக்கு பத்து ஆண்டுகளும் ஒன்பது மாதங்களும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொலம்பியா மற்றும் ஸ்பெய்ன் இரட்டைப் பிரஜாவுரிமை கொண்ட குறித்த போதைப் பொருள் வர்த்தகர் பேசல் நகருக்கு போதைப் பொருள் கடத்தியுள்ளார். இந்த தண்டனைக் காலம் நிறைவடைந்ததுடன், மேலும் 12 ஆண்டுகளுக்கு சுவிட்சர்லாந்திற்குள் குறித்த நபர் பிரவேசிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
போதைப் பொருள் சட்டம் மற்றும் நிதிச் சலவை சட்டம் ஆகியனவற்றை மீறிச் செயற்பட்டதாக குறித்த நபர் மீது குற்றம் சுமத்தி நிரூபிக்கப்பட்டுள்ளது
கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான காலப் பகுதியில் மட்டும் குறித்த நபர் ஒன்பது தொன் எடையுடைய கொக்கேய்ன் போதைப் பொருளை கடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சாக விரும்புறவங்க எங்ககிட்ட வாங்க – சுவிற்சர்லாந்தில் விளம்பரம்.!!
போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டமை சந்தேகமின்றி நிரூபிக்கப்பட்டதனால் இவ்வாறு தண்டனை விதிப்பதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
https://www.youtube.com/watch?v=j7RMnXIAKxM
மேலும் சுவிற்சர்லாந்தின் உள்ளுர் செய்திகள் முதல் அத்தனை விடயங்களையும் அறிந்து கொள்ள SwissTamil24.Com எமது இணையத்தளத்தினை தினமும் பார்வையிடுங்கள்.
Source:- Tamilinfo