முக்கிய செய்திகள்

சுவிஸில் தடுப்பூசி பெற்றுக்கொண்ட பின்னரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்

21 60a0f2a1b5b27

சுவிட்சர்லாந்தில் இரண்டு டோஸ் தடுப்பூசி பெற்றுக்கொண்ட பின்னரும் 129 பேர்கள் கொரோனா தொற்றுக்கு இலக்கானதாக சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் மே 14 முடிய மொத்தம் 1.2 மில்லியன் மக்கள் கொரோனாவுக்கான இரண்டு டோஸ் தடுப்பூசிகளும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

மேலும், இன்னொரு 1.1 மில்லியன் மக்கள் தங்கள் முதல் டோஸ் பெற்றுக்கொண்டுள்ளனர். இதனால் கொரோனா தொற்றுக்கு எதிராக குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியாவது பெற்றுக்கொண்டவர்கள் எண்ணிக்கை 2.3 மில்லியன் என கணக்கிடப்பட்டுள்ளது.

Thulasi-Thirumana-Sevai

இந்த நிலையில், இவர்களில் 129 பேர்கள் கொரோனா பாதிப்புக்கு இலக்கானதாக சுவிஸ் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஆனால், சுவிஸில் இரண்டு டோஸ் தடுப்பூசியும் எடுத்துக்கொண்ட 1.2 மில்லியன் மக்களில் சுமார் 5-ல் இருந்து 6% மக்களுக்கு கொரோனா பாதிப்பு வர வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது.

21 60a0f2a1b5b27

இருப்பினும், உயிர் அபாயம் ஏற்பட வாய்ப்பில்லை என்றே நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் கண்டிப்பாக அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Related posts