முக்கிய செய்திகள்

சுவிஸில் காதலியை பல ஆண்டுகளாக மறைத்து வைத்த தாய்லாந்து மன்னர்

சுவிஸில்

தாய்லாந்து மன்னரின் காதலியான Suthida Vajiralongkorn பல ஆண்டுகளாக சுவிட்சர்லாந்தின் ஒப்வால்டன் மண்டலத்தில் தங்கி இருந்ததாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

ஒப்வால்டன் மண்டலத்தில் செயல்பட்டுவரும் பிரபலமான ஹொட்டல் ஒன்றிலேயே, தாய்லாந்து மன்னரின் காதலியும் தற்போதைய ராணியுமான 42 வயது Suthida Vajiralongkorn தங்கியிருந்துள்ளார்.

மொத்தம் நான்காண்டு காலம் அவர் சுஸில் தங்கியிருந்ததாக தெரிய வந்துள்ள நிலையில், மன்னர் Maha Vajiralongkorn பல முறை தமது காதலியை சந்திக்கும் நோக்கில் சுவிட்சர்லாந்துக்கு ரகசியமாக வந்து சென்றதாகவும் கூறப்படுகிறது.

Waldegg ஹொட்டலில் தங்கியிருந்த சுதிதா, ஊழியர்களிடம் தெளிவற்ற முறையில் நடந்து கொண்டதாகவே பேசப்படுகிறது.

சுவிஸில்

2018-ல் ஒரு முறை தாய்லாந்து மன்னர் தமது காதலியை சந்திக்க வந்த போது குறித்த ஹொட்டலின் 7வது மாடி முழுவதும் முன்பதிவு செய்யப்பட்டதாகவும், 6வது மாடியில் மன்னருக்கான பிரத்யேக ஊழியர்கள் தங்கியிருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் 2019ல் நீண்ட நாள் காதலியான சுதிதாவை தாய்லாந்து மன்னர் நான்காவதாக திருமணம் செய்து கொண்டார். தாய்லாந்து விமான சேவை நிறுவனத்தில் பணியாற்றும் போதே சுதிதா தாய்லாந்து மன்னருடன் அறிமுகமாகியுள்ளார்.

தொடர்ந்து தமது மெய்க்காப்பாளராக சுதிதாவை நியமித்தார் மன்னர். 2016ல் Maha Vajiralongkorn மன்னராக பொறுப்பேற்றதும், சுதிதாவை தளபதிகளில் ஒருவராக நியமித்தார்.

2019ல் சுதிதா தாய்லாந்து மன்னரால் திருமணம் செய்துகொள்ளப்பட்டு, ராணியாக பொறுப்பேற்றுக்கொண்டார். இருப்பினும், Waldegg ஹொட்டலில் அவர் தற்போதும் தங்கி இருக்கிறாரா என்ற தகவல் ரகசியமாகவே பாதுகாக்கப்படுகிறது.

Related posts