முக்கிய செய்திகள்

சுவிஸில் கல்வி நிறுவனங்கள் மீது தொடர் வெடிகுண்டு மிரட்டல்

சுவிஸில், கல்வி நிறுவனங்கள், தொடர் வெடிகுண்டு, மிரட்டல்

சுவிஸில் கல்வி நிறுவனங்கள் மீது தொடர் வெடிகுண்டு மிரட்டல்

சுவிஸில் கல்வி நிறுவனங்கள் மீது தொடர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கில் கைதான நால்வருக்கு கடுமையான அபராதமும் சிறைவாசமும் கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த விவகாரம் தொடர்பில் சுமார் 20 சந்தேக நபர்களை விசாரித்ததாகவும், அதில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடர்பில் நால்வரை கைது செய்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கைதுக்கு தொடர்புடைய மிரட்டல் சம்பவம் கடந்த ஆண்டு மார்ச் 12 மற்றும் 24ம் திகதிகளில் வாட் மண்டலத்தில் செயல்பட்டுவரும் சில முக்கிய கல்வி நிறுவனங்கள் மீது நடத்தப்பட்டது.

சுவிஸில் கல்வி
சுவிஸில் கல்வி

கைதான நால்வரில் இருவர் பெண்கள் எனவும், 18 முதல் 23 வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும், இதில் இருவர் சிலி மற்றும் குரோஷியா நாட்டவர்கள் எனவும் எஞ்சிய இருவரும் சுவிஸ் நாட்டவர்கள் எனவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

மட்டுமின்றி இவர்கள் நால்வரும் தொடர்புடைய கல்வி நிறுவனங்களில் படித்து வந்தவர்கள் எனவும் தெரிய வந்துள்ளது. வழக்கின் தன்மையை கருத்தில் கொண்டு இந்த நால்வரையும் மூன்று மாதங்களுக்கு முன் விசாரணை காவலில் வைக்குமாறு அரசு வழக்கறிஞர் கோரியுள்ளார்.

இலவசமாக Deutsch மொழி கற்கலாம் வாங்க | பகுதி-3 | SwissTamil24.Com

மேலும் இவர்களது தகவல்கள் குற்றவியல் பதிவேட்டில் பதிவதால் எதிர்காலம் மற்றும் தொழில் வாய்ப்புகளை அது பாதிக்கும் என தெரிய வந்துள்ளது.

கூடுதலாக, பொலிஸ் மற்றும் மீட்பு நடவடிக்கைகளின் செலவுகளுக்காக ஒரு வழக்குக்கு 10,000 முதல் 15,000 பிராங்குகள் வரை செலுத்தும் கட்டாயத்துக்கு உள்ளாவார்கள்.

மட்டுமின்றி இந்த நால்வரும் இனி கல்வி நிறுவனங்களில் இருந்து விலக்கப்படுவார்கள், பெருந்தொகை அபராதம் செலுத்த நேரிடும், மட்டும்மின்றி சிறைவாசமும் அனுபவிக்கும் சூழல் ஏற்படும்.

Related posts