SwissTamil24.Com
Swiss informations

சுவிஸில் எந்த மாகாணத்தில் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க குறைவான செலவு..?

சுவிட்சர்லாந்தின் எந்த மாகாணத்தில் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க குறைவான செலவு பிடிக்கும்?

சமீபத்திய ஆய்வு ஒன்று, சுவிட்சர்லாந்தின் எந்த மாகாணத்தில் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க அதிக செலவு பிடிக்கும், எந்த மாகாணத்தில் குறைந்த செலவு பிடிக்கும் என்பது போன்ற விவரங்களை வெளிக்கொணர்ந்துள்ளது.

சுவிஸ் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்பது சிக்கலான ஒரு நடைமுறை என்பதையும், அதற்கான விதிமுறைகள் மாகாணத்துக்கு மாகாணம் மாறுபடும் என்பதையும் ஒருவேளை நீங்கள் அறிந்திருக்கலாம்.

அத்துடன், சுவிஸ் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்பதற்கான கட்டணமும், நீங்கள் சுவிட்சர்லாந்தில் எங்கு வாழ்கிறீர்கள் என்பதைப் பொருத்து மாறுபடும்.

சுவிஸ் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்பதற்கான பெடரல் கட்டணத்தில் மாற்றமில்லை. அது பெரியவர்களுக்கு 100 சுவிஸ் ஃப்ராங்குகள். ஆனால், மாகாண மற்றும் communal மட்டத்திலான கட்டணம், இடத்துக்கு இடம் மாறுபடும்.

இந்நிலையில், சுவிஸ் ஆய்வு ஒன்று, சுவிட்சர்லாந்தின் எந்த மாகாணத்தில் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க அதிக செலவு பிடிக்கும், எந்த மாகாணத்தில் குறைந்த செலவு பிடிக்கும் என்பது போன்ற விவரங்களை வெளிக்கொணர்ந்துள்ளது. அதன்படி, Schwyz மாகாணத்தில்தான் சுவிஸ் குடியுரிமைக்கு விண்ணப்பிப்பதற்கு மிக அதிக கட்டணம் என்பது தெரியவந்துள்ளது. Schwyz மாகாணத்தில் சுவிஸ் குடியுரிமைக்கு விண்ணப்பிப்பதற்கான கட்டணம், 3,600 சுவிஸ் ஃப்ராங்குகள் ஆகும். அதாவது, பெடரல் கட்டணம் 100 ஃப்ராங்குகள், மாகாண கட்டணம் 500 ஃப்ராங்குகள் மற்றும் communal கட்டணம் 3,000 ஃப்ராங்குகள்!

சுவிஸில் எந்த மாகாணத்தில்

அதே நேரத்தில், Lausanne மாகாணத்திலோ நான்கு மடங்கு குறைவான கட்டணமே வசூலிக்கப்படுகிறது. Lausanne மாகாணத்தில் சுவிஸ் குடியுரிமைக்கு விண்ணப்பிப்பதற்கான கட்டணம், 800 சுவிஸ் ஃப்ராங்குகள் ஆகும். அதாவது, பெடரல் கட்டணம் 100 ஃப்ராங்குகள், மாகாண கட்டணம் 450 ஃப்ராங்குகள் மற்றும் communal கட்டணம் 250 ஃப்ராங்குகள்!

இதுபோக, குடியுரிமை வகுப்புக்கு கட்டணம், மொழித்தேர்வுக்கு கட்டணம், குடியுரிமை கோரி விண்ணப்பிக்கும் விண்ணப்பத்துக்கான ஆவணத்துக்காக ஒரு கட்டணம் என பல்வேறு மறைமுக கட்டணங்களும் உள்ளன என்பதையும் கவனத்தில் கொள்வது நல்லது

all image 1600x603 1

Related posts

உலகின் அதி கூடிய மணித்தியால சம்பளம் வழங்கப்படும் இடமாக சுவிட்சர்லாந்தின் ஜெனீவா.?

admin

சுவிட்சர்லாந்தில் வாழ்பவர்களில் புலம்பெயர்தல் பின்னணி கொண்டவர்கள் எவ்வளவுபேர் தெரியுமா?

admin

சுவிற்சர்லாந்தின் லுசேர்ன் நகரம் உலகின் அழகான நகரமாக தெரிவு.!!

admin

சுவிட்சர்லாந்தில் உள்ள குடிநீர் ஏன் உலகிலேயே சிறந்தது தெரியுமா.?

admin

சுவிஸ் நாட்டு நாணயத்தை வேறு எந்த நாடுகள் பயன்படுத்துகின்றன தெரியுமா..?

admin

சுவிட்சர்லாந்து நெடுஞ்சாலைகள் (Autobahn) பற்றி சுவாரசியமான தகவல்கள்.!!

admin

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More