முக்கிய செய்திகள்

சுவிஸில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சிக்கிய 6 மாத குழந்தை

medium 2021 05 30 2447edae47

சுவிட்சர்லாந்தின் Graubünden மண்டலத்தில் இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 52 வயதான நபர் மரணமடைந்துள்ளதுடன் பிஞ்சு குழந்தை ஒன்று காயங்களுடன் தப்பியுள்ளது.

Graubünden மண்டலத்தில் Disentis பகுதி அருகாமையில் சனிக்கிழமை பிற்பகல் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் 52 வயது நபர் பரிதாபமாக மரணமடைந்துள்ளதுடன், அவரது மனைவி படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளார்.

விபத்தில் சிக்கிய இன்னொரு வாகனத்தில் 6 மாத குழந்தையுடன் வந்த இளம் வயது தம்பதி, காயங்களுடன் தப்பியுள்ளனர்.

விபத்திற்கான காரணங்க தொடர்பில் தெளிவான தகவல் இல்லை என்றே கூறப்படுகிறது. திடீரென்று நடந்த இந்த விபத்தில் 52 வயது நபர் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரையும் மீட்புக்குழுவினர் வந்ததன் பின்னரே மீட்க முடிந்துள்ளது.

medium 2021 05 30 2447edae47

படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இருவரும் உடனடியாக ஹெலிகொப்டர் ஆம்புலன்ஸில் Chur மண்டல மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த நிலையில் அந்த 52 வயது நபர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். அவரது மனைவி(52) படுகாயங்களுடன் சிகிச்சையில் உள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட்ய் வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related posts