இந்திய சுற்றுலா பயணிகளுக்கு வீசா வழங்கும் நடைமுறையில் சில கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
இந்திய சுற்றுலா பயணிகளுக்கு வீசா வழங்கும் நடைமுறைகளில் சில கட்டுப்பாடுகளை சுவிட்சர்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்தியாவிற்கான சுவிட்சர்லாந்து தூதரகம் இந்த விடயத்தை அறிவித்துள்ளது.
குறிப்பாக சுவிட்சர்லாந்து சுற்றுலா நிறுவனங்களுக்கு இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிக அளவிலான விசா விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படுவதன் காரணமாக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக குழு அடிப்படையிலான பயணங்களுக்கான அனுமதி தற்காலிக அடிப்படையில் இடை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்படுகிறது.
அதாவது ஒரு நிறுவன பணியாளர்கள் போன்ற ஒரு குழு அடிப்படையிலான சுற்றுலா பயணிகளுக்கு வழங்கப்படும் வீசா தற்காலிக அடிப்படையில் இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் வரையில் இந்த கட்டுப்பாடு நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குழு அடிப்படையிலான சுற்றுலாப் பயணிகளுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது அதிக லாபமீட்டக் கூடியது என சுற்றுலா நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
இந்த விசா நடைமுறை ரத்து செய்யப்பட்டமை தங்களது லாபத்தை பாதிக்கும் என சுட்டிக்காட்டி உள்ளனர்.