முக்கிய செய்திகள்

சுவிஸின் நிலைமை மிகவும் மோசமடையும்! விஞ்ஞானிகள் எச்சரிக்கை

சுவிஸின்

சுவிஸின் நிலைமை மிகவும் மோசமடையும்! விஞ்ஞானிகள் எச்சரிக்கை.!!

கொரோனா தொற்றுகள் அதிகரித்து வருகின்ற போதிலும், சுவிட்சர்லாந்து கட்டுப்பாடுகளை தளர்த்த தொடங்கியுள்ளதால் நிலைமை மிகவும் மோசமடைய வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஐரோப்பாவிலே கொரோனா நோய்த்தொற்றுகள் அதிகரித்து வரும் வேளையில், கட்டுப்பாடுகளை தளர்த்தும் ஒரு நாடு சுவிட்சர்லாந்து என்பது குறிப்பிடத்தக்கது.

தொற்றுகள் மிக மெதுவாக அதிகாரித்து வருவதாலும், தடுப்பூசி திட்டம் துரிதப்படுத்தப்படுவதாலும், மருத்துவமனைகளில் நெருக்கடி நிலை இல்லை என்பதாலும் கட்டுப்பாடுகளை தளர்த்தும் நடவடிக்கை நியாயமானது என்று அரசாங்கம் கூறுகிறது.

சுவிஸின்
சுவிஸின் நிலைமை மிகவும் மோசமடையும்! விஞ்ஞானிகள் எச்சரிக்கை

சுவிஸில் பார்கள் மற்றும் உணவகங்கள் வெளிப்புறத்தில் திறந்தவெளி சேவைகளை திறக்க முடியும், சில பல்கலைக்கழக வகுப்புகளை மீண்டும் தொடங்கலாம், மேலும் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் கடைபிடிக்கும் வரை ஜிம்கள் மற்றும் சினிமாக்கள் கூட திறக்கப்படலாம்.

ஆனால், ஆபத்து கணிசமாக இருக்கிறது என்றும், கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பில் பொது மக்களிடையே மாறுபட்ட கருத்து இருப்பதாக அரசாங்க விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சுவிட்சர்லாந்தில் இன்று முதல் அமுலுக்கு வரும் மாற்றங்கள்

இந்த நடவடிக்கை பலன் அளித்தால் சுவிட்சர்லாந்து அதன் அண்டை நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஒப்பீட்டளவில் கொரோனா தொற்றுநோயிலிருந்து மீளும்.

பலன் அளிக்காமல் கொரோனாவின் மூன்றாவது அலை ஏற்பட்டால், சுவிஸ் மிகவும் கடினமான கோடைகாலத்தை எதிர்கொள்ளும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

Source

Related posts