முக்கிய செய்திகள்

மீண்டும் இழுத்து மூடப்படும் சுவிற்சர்லாந்து உணவகங்கள் – அரசு அறிவிப்பு

சுவிற்சர்லாந்து உணவகங்கள்

மீண்டும் இழுத்து மூடப்படும் சுவிற்சர்லாந்து உணவகங்கள் – அரசு அறிவிப்பு – சுவிட்சர்லாந்தில் அமுலில் இருக்கும் பகுதி நேர பொதுமுடக்கம் நெகிழ்த்தப்படுமா அல்லது கட்டுப்பாடுகள் மேலும் நீட்டிக்கப்படுமா என்பது குறித்து இன்று விவாதிக்கப்பட்டதில் உணவகங்கள் குறித்த விபரம் வெளியாகியுள்ளது. சுவிஸ் பெடரல் கவுன்சில் இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.

அரசைப் பொருத்தவரையில் இது ஒரு கடினமான முடிவு. அமைச்சர்களுக்கோ எல்லா பக்கங்களில் இருந்தும் அழுத்தம் கொடுக்கப்படுகிறது.

கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படவேண்டும் என்று கோருவோர், கொரோனா தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை அதிகரித்துவருவதையும், கொரோனா வைரஸ் பன்மடங்கு வேகத்தில் பரவிவருவதையும் சுட்டிக்காட்டுகிறார்கள்.

இதற்கிடையில் தற்போதிருக்கும் பரிசோதனைகளால் கண்டுபிடிக்க இயலாத ஒரு புதிய வகை கொரோனா வைரஸ் பிரான்சில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது வேறு அச்சத்தை அதிகரித்துள்ளது.

சுவிற்சர்லாந்து,உணவகங்கள்

 

ஆனால், மறு பக்கம் பார்த்தால், மீண்டும் பொதுமுடக்கம் அமுல்படுத்தப்படுமானால், அது பொருளாதாரத்தை பயங்கரமாக பாதிக்கும்.

மக்களோ வீடுகளில் அடைந்து கிடந்து மனதளவில் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

ஆக, இன்றைய தினம் பெடரல் கவுன்சில் அறிவிப்பின் படி உணவகங்கள் மற்றும் விடுதிகள் என்பன தொடர்ந்தும் இந்த மாத இறுதி வரை மூடப்பட்டிருக்கும் என அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் பலரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த மாதம் ஆவது முடிவுக்கு வரும் என எண்ணியிருந்த மக்களுக்கு இது பலத்த ஏமாற்றத்தையும் உணவு விடுதி உரிமையாளர்களுக்கு மிகுந்த வருத்தத்தையும் இச் செய்தி அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts