சுவிற்சர்லாந்து தேசிய தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பல்வேறு மாகாணங்களிலும் நேற்று நள்ளிரவு வானவேடிக்கைகள் இடம்பெற்றுள்ளது.
குறிப்பாக பாசல் மாகாணத்தில் இடம்பெற்ற வானவேடிக்கைகளில் 1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக மக்கள் ஒன்று திரண்டபோதும் எந்தவித அசம்பாவிதங்களும் இன்றி வானவேடிக்கை சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளதாக பாசல் கன்டோன் போலீசார் அறிவித்துள்ளனர்.
பாசல் நகரத்தின் கன்டன் காவல்துறையின் ஊழியர்கள் மற்றும் பாசல்-ஸ்டாட் மீட்பு சேவையின் துணை மருத்துவ பணியாளர்கள் மற்றும் தொழில்முறை தீயணைப்புப் படையினர் தமது முழுமையான பங்களிப்பை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
முந்தைய ஆண்டுகளைப் போலவே அனைத்து நிகழ்வு நடைபெறும் இடங்களிலும் கன்டோனல் போலீசார் கடமையில் இருந்தமையை காணக்கூடியதாக இருந்தது.
துரதிர்ஷ்டவசமாக அனைத்து பார்வையாளர்களும் காவல்துறை விதிமுறைகளின் விதிகளைப் பின்பற்றவில்லை என சொல்லப்படுகிறது – மேலும் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு மிக அருகில் பட்டாசு வெடித்ததால் ரோந்துப் பணியாளர்களை சில முறை அழைக்க வேண்டியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது தவிர திருட்டு தொடர்பாக 3 பேரை கன்டோனல் போலீசார் கைது செய்துள்ளமையும் சிறியளவிளான சண்டையின் போது காவல்துறை பல முறை அழைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் புதர் பகுதி ஒன்றுக்குள் தீ பரவியமையிளால் தீயணைப்பு படையினர் மும்முரமாக பணியினை மேற்கொண்டு தீயை விரைவாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருந்தனர்.
இது மாத்திரமின்றி ஒரு பெண்ணின் முகத்தில் பட்டாசு வெடித்ததால் சிகிச்சை தேவைப்பட்டது. நள்ளிரவுக்குப் பிறகு மது மற்றும் வேறு போதைப்பொருட்கள் பாவனையாளர்களால் சிரமம் ஏற்பட்டதோடு மருந்துவர்கள் அழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு அசம்பாவிதங்கள் கட்டுப்பட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Images: Kantonspolizei Basel-Stadt
News: Kantonspolizei Basel-Stadt