சுவிற்சர்லாந்தில் பனிச்சறுக்கல் விளையாட்டுகளுக்கு குவியும் மக்கள்
சுவிட்சர்லாந்து ஸ்கை ரிசார்ட்களில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் குவிந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கேபிள் கார்கள் செலுத்தப்படும் இடங்களில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் வரிசையில் நிற்பதனை அவதானிக்க முடிந்தது.
சீரான காலநிலை காரணமாக ஸ்கை ரிசார்ட்களில் பெரும் எண்ணிக்கையிலான பனி விளையாட்டு ஆர்வலர்கள் குவியத் தொடங்கியுள்ளனர். பெரும் எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளை எதிர்பார்ப்பதாக ஸ்கை ரிசார்ட் நிறுவனங்களின் உரிமையாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
கோவிட் பெருந்தொற்று நிலைமைகளுக்கு மத்தியிலும் கூடுதலான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளது. பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இவ்வாறு ஸ்கை ரிசார்ட்களை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.