Image default
Swiss informations

சுவிற்சர்லாந்தில் விரைவாக குடியுரிமை பெறுவது எப்படி..?

சுவிட்சர்லாந்தில் வாழும் பலர், தாங்கள் விரைவாக சுவிஸ் குடியுரிமை பெறத் தகுதியுடையவர்கள் என்பதை அறியாமலே இருக்கிறார்கள், நீங்களும் அவர்களில் ஒருவரா?

இம்மாதம் (ஏப்ரல்) 8ஆம் திகதி, பெடரல் புலம்பெயர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்று, சுவிட்சர்லாந்தில் வாழ்பவர்களில் நான்கில் ஒரு பங்கு மக்கள் தங்களுக்கு சுவிஸ் குடியுரிமை இல்லாததால் தேர்தலில் வாக்களிப்பதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் வாழும் வெளிநாட்டவர்களில் சுமார் 350,000 பேர் சுவிட்சர்லாந்தில் பிறந்தவர்கள். சுமார் 35,000 பேர் சுவிட்சர்லாந்தில் குடியமர்ந்த குடும்பங்களில் பிறந்த மூன்றாம் தலைமுறையினர்.

இந்த மூன்றாம் தலைமுறையினர் சுவிஸ் குடியுரிமை பெறுவதைக் குறித்து இந்தக் கட்டுரை விவரிக்கிறது.

சுவிஸ் குடியுரிமை

சுவிஸ் குடியுரிமை பெறுதல்

வெளிநாட்டினர் இரண்டு வகையில் சுவிஸ் குடியுரிமை பெறலாம்.

ஒன்று, சாதாரண முறையில் குடியுரிமை பெறுதல்: இந்த முறையில் குடியுரிமை பெற ஒன்று முதல் இரண்டு ஆண்டுகள் வரை ஆகலாம்.

இரண்டு விரைவாக, அல்லது எளிய முறையில் குடியுரிமை பெறுதல்: இம்முறையில் குடியுரிமை பெற அதிகபட்சம் ஓராண்டுதான் ஆகும்.

பொது விதிகளின்படி, இந்த விரைவான குடியுரிமை பெறும் முறைமை, குற்றப் பின்னணி இல்லாமை, சுவிட்சர்லாந்தில் வாழிட உரிமம் பெற்றுள்ளது முதலான அனைத்து நிபந்தனைகளுக்கும் உட்படுபவர்களுக்கானது. சாதாரண முறை, அதிகாரிகளின் முடிவை சார்ந்து குடியுரிமை பெறுபவர்களுக்கானது.

விரைவாக குடியுரிமை பெறுதல்

2018, பிப்ரவரி முதல், 25 வயதுக்குக் கீழ் உள்ள வெளிநாட்டவர்கள், அவர்களது தாத்தா பாட்டி ஏற்கனவே குடியுரிமை பெற்று சுவிட்சர்லாந்தில் வாழ்ந்துவரும் நிலையில் விரைவு முறை குடியுரிமை கோரலாம்.

வெளிநாட்டவர்களான பெற்றோர்களைக் கொண்ட ஒரு நபர், கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்கு உட்படும் பட்சத்தில், விரைவு முறை குடியுரிமை கோரலாம்.

விரைவு முறை குடியுரிமை கோரும் நபரின் தாத்தா அல்லது பாட்டி, இவர்களில் ஒருவர் சுவிட்சர்லாந்தில் பிறந்தவராகவோ அல்லது சுவிட்சர்லாந்தில் B, C, L அல்லது A வாழிட உரிமம், அல்லது a carte de Legitimation என்னும் பணி உரிமம் பெற்றவராகவோ இருக்கவேண்டும்.

குறைந்தபட்சம், அவரது பெற்றோரில் ஒருவராவது C உரிமம் பெற்றவராகவும், குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சுவிட்சர்லாந்தில் வாழ்ந்தவராகவும், குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் சுவிட்சர்லாந்தில் கட்டாயக் கல்வி முடித்தவராகவும் இருக்கவேண்டும்.

விரைவு முறை குடியுரிமை கோரும் நபர் சுவிட்சர்லாந்தில் பிறந்தவராக இருக்கவேண்டும்.

அவர் C உரிமம் பெற்றவராகவும், குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் சுவிட்சர்லாந்தில் கட்டாயக் கல்வி முடித்தவராகவும் இருக்கவேண்டும்.

அவர், 25 வயதுக்கு முன்பு தனது விரைவு முறை குடியுரிமை கோரும் விண்ணப்பத்தை சமர்ப்பித்திருக்கவேண்டும்.

கூடுதல் தகவல்களுக்கு…https://www.thelocal.ch/20220408/fast-track-naturalisation-in-switzerland-everything-you-need-to-know/

Advertisements

Related posts

ஐரோப்பாவிலேயே மிகச்சிறந்த நாடு சுவிற்சர்லாந்து.! எதில் தெரியுமா.?

admin

சுவிட்சர்லாந்தில் பகலிலும் வாகனங்களில் மின்விளக்கு எரியவேண்டும் ஏன் தெரியுமா.?

admin

சுவிட்சர்லாந்தில் இரவு 10 மணிக்குமேல் நின்றுகொண்டே சிறுநீர் கழிப்பது குற்றமா.?

admin

Leave a Comment