சுவிட்சர்லாந்து பொருளாதாரம் வளர்ச்சியடைந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021ம் ஆண்டில் சுவிட்சர்லாந்தின் மொத்த தேசிய உற்பத்தி 4.2 வீதத்தினால் அதிகரித்துள்ளது.
கோவிட் பெருந்தொற்று நிலைமையினால் பொருளாதாரம் பின்னடைவை சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. சுவிட்சர்லாந்து சமஷ்டி புள்ளிவிபரவியல் அலுவலகம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
இதன்படி, 2019ம் ஆண்டை விடவும் இந்த ஆண்டில் பொருளாதாரம் வளர்ச்சியடையும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. அநேகமான துறைகளில் வளர்ச்சி பதிவாகியுள்ளதாகவும் ரெஸ்டுரண்ட் உள்ளிட்ட துறைகளில் ஓரளவு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.