முக்கிய செய்திகள்

சுவிற்சர்லாந்தில் ராடர்களால் ஏற்படும் பல மில்லியன் வருமானத்தில் வீழ்ச்சி..!!

swiss tamil news 24

சுவிற்சர்லாந்தில் ராடர்களால் ஏற்படும் பல மில்லியன் வருமானத்தில் வீழ்ச்சி..!!

சுவிற்சர்லாந்தில் கொரோனாவின் காரணமாகஇ கடந்த ஆண்டு தொடக்கம் கணிசமாக குறைவான ஓட்டுனர்களே இருந்தனர்இ எனவே போக்குவரத்து விதி மீறல்களுக்கான வழக்குகள் குறைவான அளவே இருந்ததாக சொல்லப்படுகிறது.

குறிப்பாக துர்காவின் மண்டலத்தில் இது காவல்துறையின் அபராதத்தில் பாரிய ஓட்டை விழுந்துள்ளது. பொதுவாக சுவிற்சர்லாந்தில் வீதிகள் மற்றும் பிராதான சாலைகளில் வேக கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்காக ராடர் இயந்திரங்கள் பொருத்தப்பட்டிருக்கும்.

அதிக வேகமாக செல்லும் ஓட்டுனர்களின் வாகனங்களை குறித்த ராடர் படம்பிடித்து அவர்களுக்கு பின்னர் தண்டப்பணம் அறவிடப்படும். இவ்வாறான தண்டப்பணங்கள் மூலம் அரசாங்கம் பெருமனவு லாபத்தை பெற்று வந்தது. ஆனால் கொரோனா காலம் என்பதால் தற்போது அதில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுவிற்சர்லாந்தில்
சுவிற்சர்லாந்தில் ராடர்களால் ஏற்படும் பல மில்லியன் வருமானத்தில் வீழ்ச்சி..!!

குறிப்பாக துர்காவின் மாநிலத்தில் இது பாரிய சவாலாக தற்போது மாறியுள்ளது. கொரோனா காரணமாக முதலாம் அலை ..இரண்டாம் அலை என தொடர்ந்து ஏற்பட்டு மக்கள் வெளியில் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால் போக்குவரத்து பெரிதளவில் வீதிகளில் குறைந்திருந்தது.

இதனால் வீதிகளில் பொருத்தப்பட்டிருந்த ராடர் கருவிகளுக்கு வேலை இல்லாமல் போய்விட்டது. துர்காவ் ஜெய்டுங் அறிவித்தபடிஇ துர்காவ் கேன்டன் காவல்துறையினர் வரவுசெலவுத் திட்டத்தை விட ஒரு மில்லியனுக்கும் அதிகமான பிராங்க்களை தண்டப்பணங்களில் மூலம் ஒரு ஆண்டில் பெற்றதாக குறிப்பிட்டனர்.

பல லட்சம் பிராங்குகளை தண்டப்பணமாக வசூலித்து தரும் ராடர்களின் கண்களில் மண்ணை தூவி போலீசாரில் வரவு செலவு திட்டத்திலும் பாரிய பிரச்சினையை ஏற்படுத்திவிட்டது இந்த கொரோனா.

Related posts