முக்கிய செய்திகள்

சுவிற்சர்லாந்தில் சிறப்பாக இடம்பெற்ற 2021ம் ஆண்டிற்கான தமிழ்மொழி பொதுத்தேர்வு

21 6098248a88a9c

சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையினால் ஆண்டுதோறும் நடாத்தப்படும் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 27 ஆவது பொதுத்தேர்வு இன்று நடைபெற்றுள்ளது.

குறித்த பொதுத்தேர்வு நாடு தழுவிய ரீதியில் 63 தேர்வு நிலையங்களில் சிறப்பாக நடைபெற்றுள்ளது. இத்தேர்வில் முதலாம் வகுப்புத் தொடக்கம் 12 ம் வகுப்பு வரையில் கல்வி பயிலும் 4586 மாணவர்கள் பங்குபற்றியுள்ளனர்.

21 6098248ab28a6

தமிழ் மொழித்தேர்வுடன்; சைவ சமயம், றோமன் கத்தோலிக்க சமயம் ஆகிய சமயத்தேர்வுகளுக்கும் மாணவர்கள் தோற்றியுள்ளனர். 10 ம் வகுப்பு தேர்வில் 391 மாணவர்களும், 11ம் வகுப்புத் தேர்வில் 244 மாணவர்களும், 12ம் வகுப்புத்தேர்வில் 260 மாணவர்களும் தோற்றியமை சிறப்பாகும்.

கோவிட் தொற்றுக்கு மத்தியிலும் தம் தாய்மொழியைக்கற்று ஆர்வத்துடன் தேர்வு எழுதிய குழந்தைகளை வாழ்த்துவதுடன், அவர்களை ஊக்குவித்து வழி நடத்தும் பெற்றோரைப் போற்றுகிறோம்.

21 6098248a9c96f 21 6098248a88a9c 21 6098248a72943

நோய்த்தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான நடைமுறைகளைப்பேணி இத்தேர்வினைச் சிறப்பாக நடாத்துவதற்காகத் தமிழ்க் கல்விச்சேவையின் மாநில இணைப்பாளர்கள், தமிழ்ப்பள்ளிகளின் முதல்வர்கள், ஆசிரியர்கள், துணை ஆசிரியர்கள், தமிழ் இளையோர் ஆகியோர் பல்வேறு நெருக்கடிகளின் மத்தியிலும் அர்ப்பணிப்புடன் பணியாற்றினர். இத்தேர்வு நிறைவாக நடைபெற உழைத்த அனைவருக்கும் தமிழ்க்கல்விச்சேவை நன்றி தெரிவித்துள்ளது.

21 6098248a54ea8

Related posts