முக்கிய செய்திகள்

சுவிற்சர்லாந்தில் உணவங்கள் எப்போது திறக்கப்படும் – வெளியான அறிவிப்பு.!

swiss resturant, swiss hotel, swiss news in tamil

சுவிற்சர்லாந்தில் உணவங்கள் எப்போது திறக்கப்படும் – வெளியான அறிவிப்பு.! –சுவிற்சர்லாந்தில் அதிகரித்த கொரோனா காரணமாக கடந்த டிசம்பர் 22 திகதி முதல் உணவு விடுதிகள் உணவகங்கள் இழுத்து மூடப்பட்டு லாக் டவுண் அறிவிக்கப்பட்டது.

2 மாதங்களுக்கு மேல் ஆகியும் கொரோனாவின் பாதிப்பு முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் வாராத காரணத்தினால் எப்போது உணவங்களை திறப்பது என்பது பலரது கேள்வியாக இருந்தது. உணவக உரிமையாளர்கள் தங்களது வருமானம் பாதிக்கப்படுவதாக புகார் தெரிவித்து வரும் நிலையில் இந்த மாதம திறக்கப்படலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

மார்ச் மாதம் 22ம் திகதி அளவில் உணவகங்கள் திறக்கப்படலாம் என பெடரல் கவுன்சில் எதிர்வு கூறியிருந்த நிலையில் இன்று கூடிய பெடரல் கவுன்சில் வாக்கெடுப்பின் படி புதிய விபரங்கள் வெளியாகியுள்ளது.

சுவிற்சர்லாந்தில் உணவங்கள்,swiss resturant, swiss hotel, swiss news in tamil

இதுவரை மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பு வீதங்களின் அடிப்படையில் உணவகங்களை முற்றாக திறக்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் வாக்கெடுப்பு அடிப்படையில் உணவகங்களின் வெளிபகுதியை (தெராச) திறப்பதற்கு 68 சதவீதமானவர்கள் ஆதரவு தெரிவித்திருக்கின்றார்கள்.

உணவங்களின் உள்ளே கூடுவதற்கு கட்டுப்பாடுகள் விதிமுறைகள் முன்வைக்கப்பட்டுள்ளது. 5 பேர் மட்டுப்படுத்தப்பட்டு பொது வெளியில் கூடுவதற்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பார்களை திறப்பதற்கான கணக்கெடுப்பில் 22 சதவீதமானவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதோடு கிளப்புகள் திறப்பதற்கு 11 சதவீதமானவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளார்கள். இதில் குறிப்பாக 18 வயது முதல் 34 வயதுற்கு உட்பட்ட இளைஞர்களே விருப்புவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் எதிர்வரும் 22 ம் திகதி உணவகங்கள் மீண்டும் திறக்கப்படும் எனவும் பார்கள்.. கிளப்புகள் மற்றும் உடற்பயிற்சி நிலையங்கள் என்பன திறப்பதற்கு ஆதரவு இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts