சுவிற்சர்லாந்தில் அதிகம் விற்பனையாகும் Tesla Electric கார்கள் ..!! சுவிட்சர்லாந்தில் இலத்திரனியல் கார்களின் விற்பனை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் கூடுதல் எண்ணிக்கையில் இலத்திரனியல் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

கடந்த அண்டில் கொள்வனவு செய்யப்பட்ட இலத்திரனியல் வாகனங்களில் 25 வீதமானவை 100 வீதம் இலத்திரனியல் கார்கள் அல்லது ஹைபிரைட் வகையைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
டெஸ்லாவின் வை ரக கார்களே அதிகளவில் சுவிட்சர்லாந்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த 2021ம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது 2022ம்ஆண்டில் இலத்திரனியல் வாகன விற்பனையானது 5 வீத அதிகரிப்பினை பதிவு செய்துள்ளது.
ஐரோப்பிய பிராந்திய வலயத்தில் இலத்திரனியல் கார் விற்பனையில் சுவிட்சர்லாந்து 8ம் இடத்தை வகிக்கின்றது.
சுவிட்சர்லாந்தில் தற்பொழுது மொத்தமாக 12560 சார்ஜிங் நிலையங்கள் காணப்படுவதாகவும் இது கடந்த 2021ம் ஆண்டை விடவும் 35 வீத அதிகரிப்பு எனவும் தெரிவிக்கப்படுகின்றது.