சுவிட்ச்லாந்தின் தென்பகுதியில் பாரிய அளவில் ஆலங்கட்டி மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இத்தாலி மொழி பேசும் ரிக்கினோ கன்டனில் இவ்வாறு பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது.
சில பகுதிகளில் சுமார் நான்கு சென்டிமீட்டர் விட்டம் அளவுடைய பனிக்கட்டிகள் விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது. சில இடங்களில் கொல்ப்பந்து அளவிற்கு பெரிய பனிக்கட்டிகள் வீழ்ந்ததாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
பகுதியில் அதிக அளவு ஆலங்கட்டி மலையினால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மக்கள் சிறு காயங்களுக்கு உள்ளானதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறினும் எவரும் வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை பெரும் அளவிற்கு காயமடையவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
பலத்த காற்றுடன் மழை அதனைத் தொடர்ந்து இடி மின்னல் தாக்கமும் பதிவாகி இருந்தது என தெரிவிக்கப்படுகிறது.
நாட்டின் சில பகுதிகளில் கடுமையான வெப்ப நிலை நிலவி வரும் பின்னணியில் இவ்வாறு ஆலங்கட்டி மழை பெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Source:- tamilinfo