சுவிட்சர்லாந்து பல்கலைக்கழகங்களில் உளவு பார்க்கும் சீனர்கள்..? சுவிட்சர்லாந்து பல்கலைக்கழகங்களில் சீனர்கள் உளவுப் பணிகளில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சீன விஞ்ஞானிகள் மற்றும் கலாநிதி மாணவர்களை பல்கலைக்கழகங்களில் இணைக்கும் போது மிகுந்த நிதானம் தேவை அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சீன மாணவர்களை இணைக்கும் போது மிகவும் அவதானம் தேவை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சீன ஆய்வாளர்கள் மேற்குலக நாடுகளின் விஞ்ஞான ஆய்வுத் தகவல்களை பெய்ஜிங்கிற்கு பரிமாறிக் கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

சீனாவின் சட்டத்தின் பிரகாரம் அந்நாட்டுப் பிரஜைகள் தேசியப் புலனாய்வுப்பிரிவு தகவல்களை வழங்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான ஓர் பின்னணியில் சுவிட்சர்லாந்து பல்கலைக்கழகங்களில், சீன மாணவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்குவது சரியான பரிசீலனையின் பின்னர் மேற்கொள்ளப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.