சுவிட்சர்லாந்து நோக்கி அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டு யாசகர்கள் படையெடுக்கத் தொடங்கிய்யுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பேசலுக்கு (Basel) கூடுதல் எண்ணிக்கையில் வெளிநாட்டு பணியாளர்கள் வருகை தருகின்றனர்.
அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டு பிரஜைகள் பணிகளுக்காக வருகை தருவதாக தெரிவிக்கப்படுகிறது. ஜெர்மன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து சுமார் 58000 பேர் பணிகளுக்காக நாள்தோறும் பேசலுக்கு வருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாடுகளைச் சேர்ந்த யாசகர்களும் ஸ்விட்சர்லாந்துக்கு நாள் தோறும் வருகை தந்து திரும்புவதாக தெரிவிக்கப்படுகிறது.
எல்லை தாண்டிய பணியாளர்களைப் போன்று இந்த யாசகர்களும் சுவிட்சர்லாந்துக்கு காலை வேளையில் வருகை தந்து மாலையில் ஜெர்மன் அல்லது பிரான்ஸ் நாடுகளுக்கு திரும்பிச் செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.
சுவிட்சர்லாந்து பல்கலைக்கழகம் ஒன்றினால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வின் மூலம் இந்த தகவல்கள் தெரியவந்தன.
சுவிட்சர்லாந்தில் பணம் சம்பாதிக்க வாய்ப்பு அதிகம் என்ற காரணத்தினால் யாசகர்களும் ஏனைய பணியாளர்களும் நாள்தோறும் சுவிட்சர்லாந்து வருகை தருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, சுவிட்சர்லாந்தில் யாசகம் செய்வது தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.