சுவிட்சர்லாந்து சுற்றுலாத்துறையில் சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த முதல் ஆறு மாத காலப்பகுதியில் சுவிட்சர்லாந்து சுற்றுலா துறை சிறந்த நிலையில் காணப்பட்டதாகவும் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் விஜயம் செய்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனினும் அண்மைய மாதங்களில் நிலவி வரும் கடுமையான வெப்பநிலை போன்ற காரணிகளினால் வெளிநாடுகளுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதன்படி உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முதல் அரையாண்டு பகுதியில் ஹோட்டல்களில் தங்குவோரின் எண்ணிக்கை 13 தசம் எட்டு வீதமாக அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறெனினும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையானது கோவிட் பெருந்தொற்றுக்கு முன்னைய கால பகுதியில் போன்று அல்லாது இன்னமும் குறைவாகவே காணப்படுகின்றது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.