சுவிட்சர்லாந்து ஒரு பயங்கரமான நாடு – வெளிநாட்டவரின் அனுபவ பகிர்வு.! உலகில் பல நாடுகளில் வசிப்பவர்களுக்கு எப்படியாவது சுவிற்சர்லாந்துக்கு சென்று செட்டிலாகிவிடவேண்டும் அப்படீங்கிற ஒரு வாழ் நாள் ஆசை பலருக்கு இருந்து கொண்டே இருக்கும்.
ஆனால் பலரும் நினைப்பது போல சுவிற்சர்லாந்தில் வாழ்வது என்பது அவளவு எளிதான விடயம் அல்ல.
சுவிட்சர்லாந்தில் இருக்கும் சட்டதிட்டங்கள் கொஞ்சம் இறுக்கமாகவே இருப்பதோடு இங்கு வாழ்வதற்காக வாழ்க்கை செலவு என்பது மிக மிக அதிகம்.
வேறு நாட்டில் இருந்து சுவிட்சர்லாந்துக்கு பொருட்களை ஏற்றி இறக்கும் பணியில் இடுபடும் ஒருவரின் அனுபவ பதிவுகள் மூலம் பலர் இதனை புரிந்து கொள்ள முடியும்… அவரின் அனுபவ குறிப்பு இதோ…
“சுவிட்சர்லாந்து ஒரு பயங்கரமான நாடு” என்னை தவறாக எண்ண வேண்டாம்: அவர்களின் நாடு, அவர்களின் முடிவுகள். நான் அங்கு சென்றால், விதிகளை கடைபிடிக்க வேண்டும். மக்கள் நேருக்கு நேர் பொதுவாக நட்புடன் இருப்பார்கள், நிலப்பரப்பு நன்றாக இருக்கிறது. வாழ்க்கை முறை மட்டுமே கொஞ்சம் பயங்கரமாக இருக்கிறது.
எனக்கு அங்கு உறவினர்கள் உள்ளனர், ஒரு டிரக் டிரைவராக நான் அடிக்கடி சுவிட்சர்லாந்து செல்வேன். நான் ஹங்கேரிய நாட்டைச் சேர்ந்தவன், அங்கு சென்று வருவதை தொடர சில நேரங்களில் சில விதிகளை கடைப்பிடிக்க வேண்டிய அவசியத்தை நான் பழகிவிட்டேன்.
சில வருடங்களுக்கு முன்பு நான் ஒரு நிறுவனத்திற்கு பொருட்களை ஏற்ற சென்றேன். அப்போது அங்கு செல்வதற்கு மிகவும். உடனடியாக குறித்த நிறுவனத்திற்கு தகவல் கொடுத்தேன். அவர்கள் மறுநாள் காலை நேரத்தோடு வருமாறு குறிப்பிட்டார்கள்.
ட்ரக் வண்டிகள் தரித்து நிற்பதற்கு என சுவிசில் நெடுஞ்சாலைகளுக்கு இடையில் பார்க்கிங் இருக்கிறது. அதில் நிறுத்தி இரவு தூங்கிவிட்டு காலை 7 மணிக்கு புறப்படலாம் எனவும் எனக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
அது அக்டோபர் முடிவு நவம்வர் தொடக்க காலப்பகுதி. குளிர் காலம் என்பதால் கொஞ்சம் சிரமமாகவே இருந்தது. எனது ட்ரக் வாகனத்தை ஒரு இடத்தில் தரித்து நிறுத்து விட்டு இரவு தூக்கத்துக்கு தயாரானேன்.
நான் இரவில் cabin வெப்பத்தை பயன்படுத்த வேண்டியிருந்தது. மறுநாள் காலை பேட்டரி அளவு குறைவாக இருந்தது. ஏற்கனவே 6:30 ஆக இருந்ததால், பேட்டரிகளை சார்ஜ் செய்ய இன்ஜினை ஸ்டார்ட் செய்தேன். இதனால் என்ன வந்துவிடப்போகிறது.. இது ஒரு குற்றமா என்கிற விடயம் எல்லாம் நான் சிந்திக்கவே இல்லை.
சுவிஸ் மக்கள் சத்தங்களுக்கு மிகவும் உணர்திறன் உடையவர்கள் என்பதை நான் முழுமையாக அறிந்திருந்தேன், ஆனால் அது இரவு அல்ல காலை நேரம்.. தெருவில் பேருந்துகள் ஓடுகின்றன, பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள், நடைபாதையில் நடந்து செல்பவர்கள், இன்ஜின் 5 நிமிடம் ஓடிக்கொண்டிருந்தது.
அப்போது அருகில் என்னுடன் பயணித்த சுமை ஏற்றும் நிறுவனத் தலைவர் மூச்சுத் திணறி என்னிடம் ஓடி வந்து, என்ஜினை உடனே நிறுத்தச் சொன்னார். ‘ஆனால் ஏன்? ஏற்கனவே மணி 7 ஆகிவிட்டது, பேட்டரியை சார்ஜ் செய்ய வேண்டும்’ என்றேன். ‘ அதைப்பற்றி எனக்கு கவலையில்லை, இப்போதே என்ஜினைக் நிறுத்து!’ -என சீறிப்பாய்ந்தார்.
இதன் பின்னர்தான் எனக்கு காரணத்தை தெளிவாக விளங்கப்படுத்தினார். கடந்த காலங்களில் பல புகார்கள் வந்ததாக அவர் விளக்கினார். அருகிலேயே வீடுகள் உள்ளன, மேலும் டீசல் என்ஜின்கள் போன்ற ஏதேனும் இடையூறு விளைவிக்கும் சத்தம் கேட்டால் மக்கள் காவல்துறையை அழைக்கிறார்கள்.
நீ எஞ்சினை நிறுத்தி இருக்காவிட்டால் 10 நிமிடத்தில் போலீசார் இங்கு வந்திருப்பார்கள். நல்லவேளை இந்த பயணம் உன்னுடன் நான் வந்திருந்தேன் என சொன்னார்.
இப்படித்தான் இரவில் கழிப்பறையில் சுத்தம் செய்யும் போது அதிக சத்தம் கேட்டாலே பக்கத்து வீட்டுக்காரர்கள் உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்துவிடுகிறார்களாம். சுவிட்சர்லாந்து மக்கள் இரவில் சத்தம் போடுவதை முற்றாக வெறுக்கிறார்கள்.
சுவிட்சர்லாந்தில் ஓட்டுநராக நீங்கள் ஏதேனும் சிறிய தவறு செய்தால், கருணை இல்லை. வேகமாக வாகனம் ஓட்டுதல், வாகனம் ஓட்டும் போது ஃபோன் செய்தல், சட்டவிரோதமாக வாகனங்களை நிறுத்துதல் போன்றவற்றை நினைத்துக்கூட பார்க்காதீர்கள்.
சரி, விதிகள் எங்களுக்கானவை என்பதை நான் முழுமையாக புரிந்துகொண்டேன். நாம் காட்டில் அல்ல சமூகத்தில் வாழ்கிறோம். ஆனால் சுவிஸ் வாழ்க்கையினுடைய விதிமுறைகள் எனக்கு தனிப்பட்ட முறையில் சிரமமாகவே இருக்கிறது.
அண்மையில் சுவிட்சர்லாந்தில் தங்கி வேலை செய்யும் அளவுக்கு எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. ஆனால் அதனை நான் முற்றாக மறுத்துவிட்டேன்.. ஒரு நரகத்தில் என்னால் நிரந்தரமாக வாழ முடியாது. வருடத்தில் இரண்டு மூன்று தடவைகள் பணி நிமித்தம் சென்று வருவதே எனக்கு போதுமானதாக இருக்கிறது என தனது அனுபவத்தை பகிர்ந்திருந்தார்.