Image default
Swiss informations

சுவிட்சர்லாந்துக்கு சென்று வாழும் ஆசை உங்களுக்கு உள்ளதா?

சுவிட்சர்லாந்துக்கு சென்று வாழும் ஆசை உங்களுக்கு உள்ளதா?

அப்படியானால், அங்கு நடைமுறையிலிருக்கும் சில வேடிக்கையான சட்டங்கள் குறித்து நீங்கள் அறிந்துகொள்வது நல்லது!

இரவு 10 மணிக்கு மேல் நின்றுகொண்டு சிறுநீர் கழிக்கக்கூடாது

ஜேர்மனியில், நின்றுகொண்டு சிறுநீர் கழிக்கும் உரிமை ஆண்களுக்கு உள்ளது என சமீபத்தில் ஒரு நீதிபதி தீர்ப்பளித்தார். ஆனால், ஆனால், சுவிட்சர்லாந்தில் அப்படியல்ல…

குறிப்பாக, இரவு 10 மணிக்கு மேல் நின்றுகொண்டு சிறுநீர் கழிக்க அனுமதி இல்லை. காரணம், அது சத்தத்தை ஏற்படுத்தும் தொந்தரவுக்குரிய ஒரு விடயமாக சுவிட்சர்லாந்தில் கருதப்படுகிறது.

சில இடங்களில், இரவு 10 மணிக்கு மேல் டாய்லெட்டை ஃப்ளஷ் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாம்.

இறைச்சிக்காக கோழிகளை எப்படிக் கொல்லவேண்டும் என்பதிலிருந்து கொரோனா விதிகள் வரை 2022இல் சுவிட்சர்லாந்தில் பல மாற்றங்கள் நடைமுறைக்கு வர உள்ளன.

நாய் மற்றும் பூனையின் மாமிசத்தை உண்ண தடை (விதிவிலக்கும் உண்டு)

சுவிட்சர்லாந்தில் நாய் மற்றும் பூனையின் மாமிசத்தை உண்ண தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதுவே, உங்கள் வீட்டு நாய் அல்லது பூனையாக இருந்து, அதை நீங்கள் உங்கள் வீட்டுக்குள்ளேயே சமைத்து சாப்பிட தடையில்லை!

பெயர் வைப்பதில் கவனம் செலுத்தவும்

பிள்ளைகளின் நலனை பாதிக்கும் வகையிலான பெயர்களை சூட்ட அதிகாரிகள் தடை விதித்துள்ளார்கள்.

அத்துடன், மோசமான அர்த்தம் கொண்ட பெயர்களுக்கும் அனுமதி இல்லை.

செல்பி எடுப்பதில் ஒரு தடை

நீங்கள் செல்பி எடுப்பதில் அரசுக்கு ஆட்சேபனை எதுவும் இல்லை. ஆனால், நீங்கள் பிடித்த மீனுடன் செல்பி எடுக்கவும், பிடித்த மீனை மீண்டும் தண்ணீருக்குள் விடவும் அனுமதி இல்லை.

அப்புறம் என்ன? பிடித்த மீனை வீட்டுக்கு கொண்டு சுவையாக சமைத்து சாப்பிடவேண்டியதுதான்!

காரை கழுவத் தடை

உங்கள் காரை வீட்டில் வைத்துக் கழுவ சுவிட்சர்லாந்தில் அனுமதி இல்லை.

அப்படியானால் காரை சுத்தமாக வைத்திருப்பது எப்படி என்கிறீர்களா? அதற்காகத்தான் கார் கழுவும் நிறுவனங்கள் உள்ளன. அதாவது, வீட்டில் வைத்து சோப்புப் போட்டு காரைக் கழுவினால், அதனால் சோப்பு நீர் நிலத்திற்குள் இறங்கி, நிலத்தடி நீர் பாதிக்கப்படும் என்பதால்தான் வீட்டில் வைத்து காரைக் கழுவ தடை விதிக்கப்பட்டுள்ளது.

செல்லப்பிராணிகளை தனிமையாக வளர்க்க தடை

சுவிட்சர்லாந்தில் guinea pigs, goldfish மற்றும் budgie birds ஆகிய செல்லப்பிராணிகளை தனிமையாக வளர்க்கவோ, சிறு கூண்டில் அடைக்கவோ அனுமதியில்லை.

ஆகவே, இப்படிப்பட்ட செல்லப்பிராணிகளை வாங்கி வளர்க்கும் எண்ணம் இருந்தால், அவற்றிற்கு ஜோடி ஒன்றையாவது கொடுக்கத் தவறவேண்டாம்.

Source:- Balamanuvelan

Advertisements

Related posts

சுவிற்சர்லாந்தில் மனதளவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் இணையத்தளம்.!!

admin

சுவிட்சர்லாந்தில் பகலிலும் வாகனங்களில் மின்விளக்கு எரியவேண்டும் ஏன் தெரியுமா.?

admin

சுவிட்சர்லாந்து பெண் கின்னஸ் சாதனை – திருமண ஆடை வடிவில் பிரமாண்ட கேக்.!!

admin

Leave a Comment