முக்கிய செய்திகள்

சுவிட்சர்லாந்துக்கு ஒரு எச்சரிக்கை.!! – ஏற்படப்போகும் இயற்கை அனர்த்தம்

கோடையில்,குடிநீர் பற்றாக்குறை,குளிர்காவெள்ளம்,எச்சரிக்கை

சுவிட்சர்லாந்துக்கு ஒரு எச்சரிக்கை.!! – ஏற்படப்போகும் இயற்கை அனர்த்தம்- பருவநிலை மாற்றங்களால் சுவிட்சர்லாத்துக்கு பெரும் ஆபத்து நேரிட இருப்பதாக அரசு ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

பருவநிலை பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்காத பட்சத்தில், இந்த நூற்றாண்டின் இறுதி வாக்கில் குளிர்காலத்தில் ஆறுகளில் 30 சதவிகிதம் தண்ணீர் அதிகரிப்பதால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்றும், கோடை காலத்திலோ 40 சதவிகிதம் தண்ணீர் குறையும் என்பதால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என்றும் சுவிட்சர்லாந்தின் சுற்றுச்சூழல் அலுவலகம் எச்சரித்துள்ளது.

அரசு மேற்கொண்ட ஆய்வு ஒன்றில், கோடையில் 5.5 டிகிரி செல்சியஸ் அளவுக்கு ஆறுகளிலும் நீரோடைகளிலும் வெப்பநிலை அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

கோடையில்,குடிநீர் பற்றாக்குறை,குளிர்காவெள்ளம்,எச்சரிக்கை

அதே நேரத்தில் குளிர்காலத்தில் பனிப்பொழிவை விட மழை அதிகம் இருக்கும் என்றும், பனிப்பொழிவு குறைவு என்பதால் நீர் சேமிப்பு நிலையங்களில் தண்ணீர் குறையும் என்றும், அதனால் தண்ணீரின் வெப்பநிலை அதிகரிக்கும் என்றும் தெரியவந்துள்ளது.

அரசின் புதுப்பிக்கப்பட்ட கார்பன் டை ஆக்சைடு சட்டத்தின்படி பருவநிலை பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், மோசமான பின் விளைவுகள் ஏற்படும் என்றும் அந்த ஆய்வு எச்சரிக்கிறது.

பாசல் மாநில செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் :-

எதிர்காலத்தில், கோடைக்காலம் மேலும் வறண்டதாகவும், வெப்பநிலை அதிகம் உள்ளதாகவும் இருக்கும் என்கிறது அந்த ஆய்வு.

விவசாயத்துக்காக பயன்படுத்தப்படும் நிலங்களில் தாவரங்களுக்கு ஏராளம் தண்னீர் தேவைப்படும் என்பதால், தண்ணீர்ப்பற்றாக்குறை ஏற்படும் என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

ஏராளம் மழைப்பொழிவு இருக்கும் என்பதால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற இயற்கை பேரழிவுகள் ஏற்படும் என்றும் அந்த ஆய்வு எச்சரித்துள்ளது.

Related posts