Swiss headline News

சுவிட்சர்லாந்தின் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாக யாழ் இளைஞன் அறிவிப்பு

சுவிட்சர்லாந்தில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பசுமை கட்சி சார்பாக யாழ்.இளைஞரொருவர் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்து ஆர்காவ் மாநிலம் சார்பாக யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையை பூர்வீகமாகக் கொண்ட செல்வதயாளன் ரிசோத் என்ற இளைஞரே போட்டியிடவுள்ளார்.

ஈழத்தமிழர்கள் போட்டி

அந்தவகையில், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 22 ஆம் திகதி சுவிட்சர்லாந்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.

23 64ff92df0f799

இ்ந்நிலையில் அனைவரும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ரிசோத் செல்வதயாளனை வெற்றி பெற வைப்பதன் மூலம் இலங்கையில் தமிழர்கள் மீது இலங்கை இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறையை ஈழத்தமிழர் சார்பாக சுவிட்சர்லாந்து நாடாளுமன்றத்தில் உறுதிப்படுத்த முடியும் எனவும் ஆர்காவ் மானில ஈழத்தமிழர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, சுவிட்சர்லாந்து நாடாளுமன்ற தேர்தலில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பிரதான கட்சிகள் சார்பாக ஈழத்தமிழர்கள் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button